TamilSaaga

சிங்கப்பூர் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் – ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனம்

சிங்கப்பூரின் உள்ளூர் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா தனது அனைத்து ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்குள் பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 2 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க ஆலோசனையிலிருந்து குறிப்பு எடுக்கிறது என்றும், இது முதலாளிகள் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் உள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை அவசிமாக்குகிறது என்றும் கூறியது.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று கூறிய முதல் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் இது என்று ஜெட்ஸ்டார் ஆசியா இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

ஏறக்குறைய 100 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஆசியா தெரிவித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் தடுப்பூசி தங்கள் வேலைக்குத் தேவை என்ற கருத்தை ஆதரித்தனர், ஏனெனில் இது தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும்.

ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாரா பசுபதி பேசியபோது “ஜெட்ஸ்டாரில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பணியாளர்களை வைத்திருப்பது இந்த வைரஸின் கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு எதிராக வலுவான பாதுகாப்பு அடுக்குகளை வழங்கும். அதே நேரத்தில் சிங்கப்பூர் மீண்டும் சர்வதேச பயணத்திற்கு திறக்க இது உதவுகிறது என்றும் கூறினார்.

Related posts