TamilSaaga

“சிங்கப்பூரில் முழுமையாக தடுப்பூசி போட்டாலும் 14 நாட்கள் காத்திருக்கணும்.. எதற்கு?” – இதை படியுங்கள்

சிங்கப்பூரில் இன்று முதல் (ஆகஸ்ட் 10) முழுமையாக, அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்களுக்கு பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வார கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இனி உணவகங்களில் 5 பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

ஆனால் மக்கள் 5 பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது 24 மணி நேரத்திற்குள் எடுத்த பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதே போல இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலும் மக்கள் 14 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது பலரும் அரித்துக்கொள்ளவேண்டிய விஷயம்.

ஆம், ஒருவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 14 நாட்கள் கழித்தே அவர் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் தளர்வுகள் அனைத்துமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகே வழங்கப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

வேலையிடங்களில் தேவைப்படும் பட்சத்தில் வீட்டில் இருந்து பணிசெய்யும் 50 சதவிகிதம் பணியாளர்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்களில் 5 பேர் குழுவாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர் மையங்களில் இருவர் ஒன்றாக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

Related posts