TamilSaaga

“உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம்” : தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – என்னென்ன தளர்வுகள் – Detailed ரிப்போர்ட்

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நாட்டில் அமலில் இருக்கும் பல கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வருகின்ற 10ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் ஐந்து பேர் வரை சமூக ஒன்று கூடலில் கலந்து கொள்ளலாம். முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இரண்டு பேர் வரை ஒன்றுகூடலாம்

மேலும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உணவகங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் ஐந்து பேர் வரை ஒன்றாக கூடி உணவு உண்ணலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வரும்.

மேலும் பெரிய சமூக ஒன்றுகூடல்களில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் 500 பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும். தடுப்பூசி போடாதவர்கள் 50 பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட 1000 பேர் வரை கூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 250 பேர் வரை கூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிடங்களில் தேவைப்படும் பட்சத்தில் வீட்டில் இருந்து பணிசெய்யும் 50 சதவிகிதம் பணியாளர்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்களில் 5 பேர் குழுவாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர் மையங்களில் இருவர் ஒன்றாக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

Related posts