TamilSaaga

சிங்கப்பூர், இந்திய உயர் கமிஷன் அதிகாரிகள் பெயரில் மோசடி – வெளியான திகிடும் தகவல்

சிங்கப்பூரில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் அதிகாரிகளிடம் இருந்து, குடியேற்றப் பிரச்சினைகள் தொடர்பாக சில போலி ஆசாமிகள் மக்களிடம் பண மோசடி செய்துவருத்தாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குடியேற்ற அதிகாரிகளைப்போல செயல்பட்டு அவர்கள் மக்களிடம் பணபரிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பல மோசடி அழைப்புகள் (+65 83586004) என்ற இந்த எண்களில் இருந்து பெறப்பட்டதாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும் சிங்கப்பூரில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் எதையும் வெளியிடாதீர்கள் என்று கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுபோன்ற போலி அழைப்புகளை பெரும்பட்சத்தில் தயவுசெய்து madad.singerabad@gmail.com என்ற இணைய முகவரி மூலம் புகார் அளிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை போலவே செயல்படும் போலி கும்பல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தங்களுக்கு குடிநுழைவு குறித்து பெறப்படும் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts