டோக்கியோவில், ஒலிம்பிக் வெண்கல பதக்கத்திற்காக ஜெர்மனி மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் நேற்று மோதியது.
இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ பி ‘பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து அணி 2 வெற்றி 2 தோல்வியும் மற்றும் ஒரு போட்டியில் டிராவுடன் 3-வது இடத்தில் இருந்தது.
8 முறை சாம்பியனான இந்தியன் ஹாக்கி அணி இறுதியாக கடந்த 1980-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது. அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி அரையிறுதியில் கால் பதிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போராடி தோல்வி பெற்றது. இறுதிப்போட்டிக்கு ஹாக்கி அணியால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை நடைப்பெற்ற வெண்கல பதக்கத்திற்காக ஜெர்மனி மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது. ஏற்கனவே இந்திய வீரர்கள் 3 பதக்கங்களை பெற்ற நிலையில் நான்காவது பதக்கத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது இந்திய ஹாக்கி அணி.