டஸ்கி ஸ்கின்னை எப்போதுமே வெள்ளையாக காட்ட வேண்டும் என்று இவர் முயற்சித்ததே இல்லை.நாயகி என்றாலே கலராக இருந்தால் மட்டும்தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்து தனக்கென தனி பயணத்தை அமைத்துக் கொண்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடங்கிய இவரின் பயணம் இன்று வெள்ளித்திரையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் இவரின் பங்களிப்பு முக்கியத்துவமாக மாறியுள்ளது.
2010-ம் ஆண்டு நீதானா அவன் என்ற படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து, தொடர் முயற்சியால் நாயகியானார். விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இளம் நாயகியான இவர், எந்தவித தயக்கமும் இன்றி காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார்.
கிராமப்புற பெண் ஒருவர் தன் தந்தையின் கனவை ஜெயிக்க வைக்க மகளிர் கிரிக்கெட் அணியில் இணைந்து வெற்றி பெறும் கதையை மையமாக கொண்டு உருவான கனா படத்தில் நடித்தன் மூலம் தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உருவானார்.
அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளையில் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தனது தனித்திறமையால் ஓடிடி தளத்திலும் வெற்றி பயணத்தை துவக்கி விட்டார். கனா படத்திற்கு பிறகு இவரின் மூவி ஸ்டைல் அப்படியே மாறி விட்டது. இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளம், ஃபேமலி ஆடியன்ஸ் என ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்தாலே அட நம்ம வீட்டு பொண்ணுப்பா என்று சொல்லும் அளவிற்கு பரீட்சையமான முகம்.
க.பெ ரணசிங்கம் மூலம் ஓடிடி தளத்தில் ஏற்கெனவே வெற்றி கண்டு விட்டார். இப்போது க்ரைம் த்ரில்லர் வெப் சீரியஸாக வெளிவந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றிருக்கும் திட்டம் இரண்டு இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஒருவேளை இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த படங்களையெல்லாம் பார்க்காமல் மிஸ் பண்ணியிருந்தால் மறக்காமல் பார்த்துவிடுங்கள்.
- தர்மதுரை:
- செல்வி கதாபாத்திரத்தில் கிராமத்து தேவதையாக நம் கண்முன் நிற்பார். படத்தில் இவரின் காட்சிகள் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.
காக்கா முட்டை:
சரியில்லாத புருஷன், வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி கவுரமாக வாழும் குப்பத்து பெண்ணாக துணிச்சல் நடிப்பை தந்திருப்பார்.
நம்ம வீட்டு பிள்ளை:
இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என படம் பார்த்தவர்களை அழ வைத்துவிட்டார்.
க.பெ ரணசிங்கம்:
வெளிநாட்டில் இறந்து போகும் கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர கைக்குழந்தையுடன் போராடும் பெண்ணின் போராட்டமே படம்.