இயல்பான நெல்லை தமிழில் ‘டிக்டாக் நண்பர்களே’ என்ற வார்த்தையுடன் ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிக்டாக் ஜிபி முத்து இன்று சன்னிலியோன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் மக்கள் தங்களை பிரபலப்படுத்த பல செயலிகள் மூலம் முயற்சிக்கின்றனர். அதில் சினிமா துறையை போல நடிப்பு திறமையை காட்டும் ஒரு செயலி தான் டிக் டாக். இந்த டிக் டாக் வாசிகள் தங்களது திறமையை காட்ட பாட்டு, நடனம், நகைச்சுவை மற்றும் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்
இதில் பிரபலமான ஒருவர் தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. இவர் தனது ஊரில் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்..
ஜி பி முத்து டிக் டாக்கில் பல டூயட் பாடி அசத்தி வந்தார். அதன் மூலம் ரவுடி பேபி சூர்யா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டு பின் காதல் கொண்டார். இதனால் ஜி பி முத்து வின் ரசிகர்களை விட ஜி பி முத்துவின் எதிரிகள் பேப்பர் id என்ற ஒரு தலைப்பு மூலம் அவர்களை வச்சு செய்தனர்.
கஷ்டமான சூழலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தது ஜி.பி முத்துவுக்கு டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை பேரதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து ஜி பி முத்து இன்ஸ்டாகிராம் மற்றும் தனியாக ஆரம்பித்த யூடுயூப் சேனலில் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோக்கள் வைரலாக ஆரம்பித்தது.
சமுகத்திற்கு முன் தனது மகளை வைத்து ஜாதி ரீதியாக பேசியதால் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளார். இருப்பினும் சூர்யா மீதுள்ள காதலும் டிக் டாக் மேல் உள்ள ஆர்வம் அவருக்கு குறையவே இல்லை. அதனைத்தொடர்ந்து சீன செயலிகளை தடை செய்தனர். அதில் டிக் டாக் செயலியும் ஒன்று.
இதனால் மனமுடைந்து போன ஜி பி முத்து அதன்பிறகு ரவுடி பேபி சூர்யா, ஜி பி முத்து வை கைவிட்டதாகவும், இதனால் மனமுடைந்த ஜி பி முத்து டிக் டாக் செயலி திரும்பி கொண்டுவர நாட்டின் பிரதமர் மோடியிடம் டிக் டாக் செயலியை திரும்பி கொண்டு வருமாறு வேண்டினர்.
அப்படி இல்லையென்றால் தான் தற்கொலை முயற்சி செய்வதாக சொல்லியிருந்தார். இப்படி ஏகப்பட்ட அளப்பரைகளுக்கு சொந்தகாரரான ஜி.பி முத்து இன்று சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.