TamilSaaga

டோக்கியோ ஒலிம்பிக் – காலிறுதிக்கு முன்னேறிய சிங்கப்பூர் மகளிர் இரட்டையர் மேசைப்பந்து அணி

கடந்த 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கிருமி பரவல் காரணமாக தடைபட்டது. இந்நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் சார்பில் மொத்தம் 16 போட்டிகளில் 23 வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் இரட்டையர் மேசைப் பந்து போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது சிங்கப்பூர் அணி. காலை 9 மணிக்கு நடந்த முதல் சுற்றுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி பிரான்ஸ் நாட்டு அணியுடன் மோதியது. தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய நமது சிங்கப்பூர் அணி, பிரான்ஸ் நாட்டை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது.

நாளை நடக்கவிருக்கும் காலிறுதி போட்டியில் சிங்கப்பூர் அணி சீனாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை சிங்கப்பூர் அணி பதக்கங்கள் ஏதும் பெறவில்லை என்றபோதும், சிங்கப்பூரின் பல போட்டியாளர்கள் நம்பிக்கையை அளித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிகளில் 24 தங்க பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது. அண்டை நாடான இந்தியா 2 பதக்கங்களுடன் 61வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts