இ-ருபி என அழைக்கப்படும் ரசீது முறை பணப் பரிவர்த்தனை வசதியை பிரமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த முறை பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இது எப்படி செயல்படும்?
இணையவழியில் முன்கூட்டியே பணத்தை செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். பின்பு பணம் செலுத்த வேண்டிய இடத்தில் அந்த ரசீது தொடர்பான விவரங்களை வழங்கினால் மட்டும் போதுமானதாகும். அதிலிருந்து பணம் பிடித்த செய்யப்பட்டுவிடும்.
ரசீதை வாங்கும் வாடிக்கையாளர்களுகு அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.
இந்த ரசீதுகளைக் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக வாங்கிக் கொள்ள முடியும். பின்பு குறிப்பிட்ட நபர்களுக்காக வாங்கி இத்தகைய ரசீதுகளை பரிசளிக்கவும் முடியும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக இத்தகைய ரசீதுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ, கனரா வங்கி, பரோடா வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் போன்ற வங்கிகள் இந்த இ-ருபி வசதியை நடைமுறைப்படுத்தவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.