TamilSaaga
mankita batra

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளித்த மணிகா பத்ரா செய்த மோசமான செயல்..விசாரணை நடத்த உத்தரவு.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளித்த மணிகா பத்ராவின் செயல் மிகப் பெரிய விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா
பிரிட்டனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4-0 என்ற புள்ளி கணக்கில் வென்றார். பின்னர் மீண்டும் குழு போட்டியில் உக்ரைனிடம் 4-3 என்ற கணக்கில் வென்றார். இவரின் ஆட்டத்தில் வெற்றிக்கான கனி கண்டிப்பாக இருந்ததால் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாவது குழு போட்டியில் ஆஸ்திரியாவின் சோபியாவிடம் மணிகா பத்ரா தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

சர்ச்சையில் சிக்கியது எப்படி?

வீரர், வீராங்கனைகள் பர்சனல் கோச்களை தவிர்த்து மொத்தமாக எல்லோருக்கும் பயிற்சி கொடுப்பதற்காக பயிற்சியாளர் சவுமியாதீப் ராய் இந்திய டேபிள் டென்னிஸ் குழுவுடன் டோக்கியா சென்று இருந்தார். இவரும் முன்னாள் டென்னிஸ் வீரர் ஆவார்.

இப்போது டென்னிஸ் கமிட்டியில் பயிற்சியாளராக இருக்கிறார். சவுமியாதீப் ராய் மட்டுமே டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு போட்டி நடக்கும் களத்தில் ஆலோசனை வழங்க முடியும். வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் போட்டி நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயை பரன்ஜாபாயை போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

ஆனால் அவரை இந்திய ஒலிம்பிக் கமிட்டி போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்கவில்லை. வெளியே பயிற்சி கொடுக்க மட்டுமே அனுமதித்தது. தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் ஆலோசனை பெறுமாறு மணிகாவிற்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் மணிகா களத்தில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை. வெளியே தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயிடம் பெற்ற ஆலோசனைகளை வைத்தே மணிகா போட்டியில் ஆடி இருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இவரின் செயல்பாட்டுக்கு எதிராக விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய டென்னிஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

Related posts