கொரோனா தொற்றை எதிர்கொண்டு மக்களை காத்திட பல நாடுகளும் முயன்று வருகின்றன. இதில் பெரும்பாலான நாடுகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இல்லாமல் தவித்து வரும் சூழல்களும் காணப்படுகிறது.
COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் மியான்மர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக சிங்கப்பூர் சுமார் 200 லிட்டர் 10 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கும் என அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் பாதிக்கப்பட்ட மக்களின் சமூகங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நேரடியாக விநியோகிக்க SGRedCross மற்றும் MyanmarRedCross ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவோம் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 2020 இல் மியான்மருக்கான தூதர் வனேசா சான் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜாவ் தன் துன் ஆகியோர் சிங்கப்பூர் செய்த இரண்டாவது பங்களிப்பின் மூலம் அனுப்பப்பட்ட முதல் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெற்றதையும் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த அறிவிப்பையும் தகவல்களையும் வெளியுறவு அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று (ஜீலை.28) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.