TamilSaaga
airport

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்…… பயணிகளுக்கு எச்சரிக்கை!!!

சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) அறிவித்ததுபடி, ஜனவரி 9 முதல் 22 வரை சிங்கப்பூர் வருகை தரும் பயணிகள் கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம். இந்த பகுதியில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) ஜனவரி 9 முதல் 22 வரை நிலம், காற்று, மற்றும் கடல் சோதனைச் சாவடிகளில் வருகை தரும் பயணிகளுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கும் உயர்ந்த பாதுகாப்பு சோதனைகளை செயல்படுத்தவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ICA தனது ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. பயணிகள் அதிக நேரத்தை ஒதுக்க முன்பாகவே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் தேவையான ஆவணங்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குடிநுழைவு அனுமதியைப் பெற கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு பயணிகள் தயாராக இருக்க வேண்டும். பயணிகள் தங்களது பயண ஆவணங்களை முழுமையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளுக்குப் பயணம் செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை ஜனவரி 7 அன்று அறிவித்துள்ளது. அதனால் தான் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்க காரணம். இந்த பயணத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை மேற்கொண்டு, தரப்புகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறிக்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, முக்கியமான சர்வதேச பிரச்சினைகள் மற்றும் கூட்டாண்மைகளை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளிலும் இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாட்டி ஹாரிஸ், ஜனவரி 15 அன்று சிங்கப்பூரில் இருக்கும் போது, சிங்கப்பூர் தலைவர்களை சந்தித்து, சாங்கி கடற்படை தளத்திற்கும் செல்ல உள்ளார் என்று வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts