TamilSaaga

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா… மாஸ் காட்டும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்…

சிங்கப்பூரில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக இருக்கும் கே.சண்முகம் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் வொர்க் அவுட் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். 63 வயதாகும் கே.சண்முகம் வரும் நவம்பர் 27-ம் தேதி dead lifting-ல் சாதனை புரிய இருக்கிறாராம்.

இந்தியத் தமிழரான சண்முகம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். சில காலம் சிங்கப்பூர் வழக்கறிஞராக இருந்தவர். பின்னர், சிங்கப்பூரின் செம்பாவாங் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதை தொடர்ந்து, சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக இருந்து வருகிறார்.

63 வயதாகும் கே.சண்முகம் டேவிட் என்பவரிடம் dead lifting-ல் 3 ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், வரும் 27-ம் தேதி சோங் பாங்கில் fitness fiesta நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பொதுமக்களை பிட்னஸில் அதிக கவனம் செலுத்த ஊக்குவிக்கும் முயற்சியாக கே.சண்முகம் அவரின் அதிக வெயிட்டான 105 கிலோ என்னும் ரெக்கார்ட்டை முறியடிக்கும் சாதனையை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்ட்டில், சோன் பாங்கில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த fiesta-ல் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்த நிகழ்வு பலருக்கும் ஃபிட்னஸாக இருக்க உதவும் வகையில் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Chong Pang Fitness Fiesta 2022 கே.சண்முகத்தின் தொகுதியான Nee Soon GRC வரும் நவம்பர் 27ந் தேதி நடத்தப்படுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொள்ள போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதன் நுழைவுக் கட்டணமாக 5 டாலர் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 20 போட்டி அரங்குகளைக் கொண்ட இந்நிகழ்வில் 15 போட்டிகளில் வெல்லுபவர்களுக்கு 15 டாலர் மதிப்பாலான ஸ்போர்ட்ஸ் தொடர்புடைய பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் 500 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட இருப்பதால் சீக்கிரமாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts