லாட்டரி/ குலுக்கல் முறைப் பரிசுகள் என்பது அதிர்ஷ்டத்தால் அடிக்கும் ஜாக்பாட். சூரியவம்சம் மாதிரி ஒரே பாட்டுல பணக்காரனா ஆக முடியுமானு கேக்குறவங்களுக்கு முடியும் என்ற பதில் கொடுப்பது இது மாதிரியான ஜாக்பாட் தொகைகள் தான்!
அதன்படி கடந்த 7-ம் தேதியன்று சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஜாக்பாட் முறையான TOTO பரிசுத்தொகை குலுக்கலில் முதல் பரிசாக Rs.18,61,57,239 (18 கோடி 61 லட்சத்து 57 ஆயிரத்து 239 ரூபாய்) விழுந்துள்ளது. மற்ற பரிசுத் தொகைகள் எண்களைப் பொறுத்து பங்கிடப்பட்டுள்ளது.
இந்த முறை ஜாக்பாட் குலுக்கலில் மொத்த பரிசுத் தொகை 7 குழுக்களாக பிரிக்கப்பட்டும் அதாவது Group 1 முதல் Group 7 வரை. ஒவ்வொரு பரிசிற்கும் ஒவ்வொரு தொகை ஒதுக்கப்படும். மேலும் அந்த தொகை அதன் குழு மற்றும் குலுக்கலின் பொழுது எத்தனை முறை குறிப்பிட்ட எண் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதைப் பொருத்து பங்கிடப்படும்.
இதன் கடந்த குலுக்கல் வியாழன் அன்று முடிவடைந்துள்ள நிலையில் நாளை அதாவது 11-11-2024 திங்கள் மாலை 6.10 மணி அளவில் அடுத்த குலுக்கல் நடைபெறவுள்ளது. இதன் பரிசுத் தொகை மொத்தம், $4500000 (SGD) இதன் இந்திய மதிப்பு ரூ. 28,63,67,850 (28 கோடி 63 லட்சத்து 67 ஆயிரத்து 850).
மேலே குறிப்பிட்டுள்ளவாறு, இந்த பரிசுத் தொகை மொத்தம் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட எண் எத்தனை முறை திரும்ப வந்துள்ளது என்பதைப் பொறுத்து தொகை பங்கிடப்படும்.
நீங்கள் TOTO வாங்கி இருந்தால் இப்பொழுதிருந்தே ஆர்வமுடன் காத்திருங்கள், நாளை வெளியாகும் அந்த எண்கள் உங்களுடையதாகக் கூட இருக்கலாம்.
இந்த TOTO ஜாக்பாட் முறை சிங்கப்பூர் அரசாங்கத்தின் மேற்பார்வையில் அங்கீகாரம் பெற்று நடைபெறுவதால் இதற்க்கு எந்த தடைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இந்தியராக இருந்தாலும் முறையான ஆவணங்களுடன் இந்த ஜாக்பாட் குலுக்கலில் பங்குபெற முடியும் ஆனால் அதில் உள்ள நிறை குறைகள் மற்றும் நிதி அபாயங்களை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
TOTO/4D, குதிரைப் பந்தயம் போன்று சிங்கப்பூரில் ஏராளமான பெட்டிங் மற்றும் லாட்டரி முறைகள் புழக்கத்தில் உள்ளன. நீங்கள் சிங்கப்பூர்-க்கு புதியவராக இருந்தால், இந்த ஜாக்பாட் பற்றி அறிந்துகொள்ளவேண்டியது முக்கியம். பிறகு தான் இதில் நீங்கள் பங்குபெற முடியும்.
நமது தமிழ் சாக பக்கத்தில் சிங்கப்பூர் ஜாக்பாட் என்பது என்ன? எப்படி அதில் பங்கு பெற முடியும்? எந்தெந்த கடைகள் அல்லது ஏஜென்சிக்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவை? என்பது குறித்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க!