TamilSaaga

வீட்டுல போர் அடிக்குதாம்! கடை வைத்து வியாபாரம் செய்யும் 102 வயது பாட்டி!

எல்லாரும் 60 வயசுல Retired ஆயிட்டா திரும்ப வேலைக்கு போக விரும்ப மாட்டாங்க. அதையும் தாண்டி போறாங்கன்னா அவங்களுக்கு ஏதாவது தேவை இருக்கலாம் அல்லது வீட்டுல சும்மா ஏன் இருக்கணும்னு போவாங்க…ஆனா அதுக்கும் ஒரு அளவு இருக்கு. தள்ளாடும் வயதைத் தாண்டியவர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் குடும்பமும் அதற்க்கு அனுமதிப்பதில்லை. 

ஆனால் சிங்கப்பூரில் 102 வயது மூதாட்டி ஒருவர் ஒரு மளிகை-க் கடையை கவனித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வயதான பலருக்கும் நடப்பதே சற்று சிரமம், வேலை செய்வது அதை விட சிரமம். வயதாகும் பொழுது உடல் மட்டுமல்ல மனமும் தளர்ந்து போகும், பல காரியங்கள் நினைவில் இருக்காது. ஆனால் 102 வயதான Sie Choo Yong என்ற மூதாட்டி அவரின் கடையை நிர்வகிப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுப்பது முதல் அதன் விலையைக் கணக்கிடுவது வரை அனைத்தையும் கவனித்து வருகிறார். 

ஜூன் 12-ம் தேதி Tiktok பயனாளர் ஒருவரால் வெளியிடப்பட்ட வீடியோ-வால் தான் Sie Choo Yong மிகவும் வைரலானார். பொருட்களை வழங்கி அதன் விலையைக் கணக்கிட்டு, மேலும் அதற்க்கு தள்ளுபடியையும் வழங்கி அனைவரையும் அன்பால் கவனிக்கும் இவருக்கு இணையம் முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

ஏன் இவர் இங்கே பணிபுரிகிறார் என பலருக்கும் கேள்வி எழுந்த நிலையில் Sie Choo Yong-ன் மகன்கள் அளித்த பதில் மேலும் பலரை நெகிழச் செய்தது. சீனாவைச் சேர்ந்த Sie Choo Yong தனது 30-வது வயதில் சிங்கப்பூர் வந்து செட்டில் ஆகி உள்ளார். அப்பொழுதிருந்து விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது இவருக்கு 7 குழந்தைகளும் 27 பேரக் குழந்தைகளும் உள்ளனர். 

இந்தக் கடை Sie Choo Yong-ன் மகனுடையது தான், அவர் அருகிலுள்ள கடையைக் கவனித்து வருகிறார். இந்த கடையிலிருந்து லாபம் ஏதும் வரவில்லை என்றாலும் தனது தாயார் வீட்டில் தனிமையாக இல்லாமல் அவருக்கு பிடித்த வேலையை செய்து மகிழ்ச்சியாக உள்ளதே போதும்! அவர் நலமுடன் இந்தக் கடையை கவனித்து வரும் வரை இதை பிறரிடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று கூறினார். Sie Choo Yong-ன் மூத்த மகனுக்கு 66 வயது ஆகிறது இருப்பினும் தன்னை விட தனது  தாயார் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்  தெரிவித்தார்.

அருகில் உள்ள கடைக்காரர்களிடம் கேட்கப்பட்டபொழுது இந்த வயதில் Sie Choo Yong இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பது ஆச்சர்யமாக உள்ளதாக தெரிவித்தனர். Upper Bukit Timah ஷாப்பிங் சென்டர்-ல் உள்ள Lean Seng Lee Trading என்ற கடையைத் தான் Sie Choo Yong நிர்வகித்து வருகிறார். காலை 9 மணிக்கு கடையைத் திறந்து தானே வியாபாரம் செய்கிறார். 

அந்த பகுதிக்கு செல்லும் மக்கள் ஏராளமானோர் அவர் கடையில் பொருட்களை வாங்கி அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts