TamilSaaga

ரீசேல் பிளாட்களுக்கு HDB அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை! வீடு வாங்குவதும் விற்பதும் இனி கடினமில்லை!

HDB எனப்படும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் வீட்டு வசதி வாரியம், பிளாட்களை விற்பதற்கு தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தங்கள் பிளாட்களை விற்க நினைப்போர் தங்கள் வீட்டைக் குறித்த விபரங்களைப் பதிவிடலாம். வீட்டின் விலை, புகைப்படங்கள் மற்ற விபரங்கள் என அனைத்தும் சரியாக பதிவிட்டிருக்க வேண்டும். அதன்படி வீடு வாங்குபவர்கள் அதனை பார்வையிட்ட பின்னர் பண பரிவர்தனைகளையும் இதன் மூலமே செய்ய இயலும்.

மக்கள் எந்தவித பயமும் இன்றி நம்பகமான முறையில் தங்கள் கனவு வீடுகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது மே 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது ஆய்விற்காகவும் வேலை செய்யும் விதங்களை கண்காணிக்க ஆரம்பகால மாதிரியாகவும் (Soft Launch) மட்டுமே இந்த வசதி செயல்பட்டு வருகிறது. எனவே தற்பொழுது இதன்மூலம் பரிவார்த்தைகள் எதுவும் செய்ய இயலாது. இதன்மூலம் விற்பனையாளரிடம் நேரடியாக பேசி பிளாட்களை பார்வையிட்டு பின்னர் அதனை வாங்கலாம். அதிகாரபூர்வமாக வெளியிட்ட பின்னர் பதிவிட்டவர்களுக்கு e-மெயில் மூலம் அறிவிப்பு வரும். அதன் பின்னர் எந்தவித தடைகளுமின்றி இதனைப் பயன்படுத்தலாம்.

இதற்க்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளை விற்பனைக்காக பதிவு செய்யும் பொழுது HDB Flat Eligibility (HFE) Letter கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விற்கப்படும் பிளாட்களின் விலையானது அந்த பகுதியில் அதிகபட்சம் விற்பனையான அதே அதே மாடல் பிளாட்களை விட 10 சதவிகிதத்திற்கு மேல் விலை இருந்தால் அது நீக்கப்படும். மேலும் தவறான தகவல்களோ அல்லது முறையில்லாத விலையோ இருந்தால் அந்த விற்பனைப் பதிவை நீக்கும் உரிமை HDB-க்கு உண்டு.

இந்த வலைதள வசதியை வீட்டு உரிமையாளர், ஏஜெண்டுகள், ரியல் எஸ்டேட் வேலை செய்யக்கூடியவர்கள் என எவரும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தங்கள் வீடுகளை விற்க தக்க காரணம் பதிவுசெய்யப்பட்ட வேண்டும். மேலும் இந்த சேவையை யார்வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதால் பதிவு செய்யப்படும் பிளாட்கள் ஏற்கனவே வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பதிவு வெளியிடப்படும்.

மேலும் இதனைப் பயன்படுத்தும் அனைவருக்கும் singpass அடையாள அட்டையை பரிசோதித்த பின்னரே பயன்படுத்தும் அனுமதி (Login) வழங்கப்படும்.

வீடு வாங்கப்போகும் நபர்கள் தங்கள் பொருளாதாரம், வேலை மற்றும் உங்களின் வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியாக ஆலோசித்து பின்னர் வீடுகளை வாங்க அறிவுறுத்தப்படுகிரார்கள்!

இந்த செய்தியை சிங்கப்பூர் செய்தியாளர் சந்திப்பில் HDB நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒருவேளை இந்த சேவையில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு ஏதேனும் ஏமாற்று வேலை நடந்தால் Council of Estate Agencies உடன் இணைந்து விசாரிக்கப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படும்.

HDB-ல் வீடுகளை விற்பனைக்காக பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்கள்:

1. முதலில் விற்பனைக்கான பதிவினை இட HDB-Flat Portal-ல் “Create Listing” என்ற தேர்வைக் க்ளிக் செய்யவும்.
2. இதில் Flat மற்றும் அதன் உட்புறங்களின் 10 புகைப்படங்கள்
3. நிர்ணயிக்கப்பட்ட விலை
4. வீட்டைக் குறித்த விபரங்கள் அதாவது அமைந்துள்ள இடம் மற்றும் சுற்றுப்புறம், வீட்டின் அமைப்பு அல்லது வேறு ஏதேனும் பிரத்தியேக குறிப்புகள் இருப்பின் பதிவிடலாம்.
5. அந்த வீட்டில் தற்காலிகமாக யாரேனும் தங்கியிருந்தால் அதனைக் குறித்த விபரங்கள் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும்.

வீடு வாங்க தகுதியுடைய மக்கள் தங்களுக்கு பிடித்த வீடுகளின் விபரங்களை ஆராய்ந்த பின்னர், விற்பனைப் பதிவில் சென்று அவர்களுக்கான visit Appointment-ஐ புக் செய்ய வேண்டும்.

இதற்கான நேர அட்டவணை அந்த பதிவில் உள்ள காலண்டரில் கொடுக்கப்பட்டிருக்கும். பச்சை வட்டம் இடைப்பட்ட தேர்வுகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கான Appointment-ஐ புக் செய்து வீட்டை நேரில் சென்று பார்த்து பின்னர் வாங்கலாம்.

நம்பகமான மற்றும் பாதுகாப்பான முறையில் தங்கள் கனவு இல்லங்களை வாங்க சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த சேவை மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts