சிங்கப்பூர் : 2024ம் ஆண்டு செப்டம்பர் 01ம் தேதியில் இருந்து S Pass பெறுவதற்கான தகுதிகளை மாற்றி அமைக்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு கொண்டு வர உள்ள இந்த புதிய விதிமுறைகள் S Pass பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
புதிய விதிகளின் படி S Pass பெறுவதற்கான தகுதிகள் :
அதாவது, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து S Pass பெறுவதற்கான அடிப்படை சம்பளம் என்பது 3150 சிங்கப்பூர் டாலர்களாக உயர்த்தப்பட உள்ளது. அடிப்படை சம்பள தொகை 1300 டாலர்களில் இருந்து 3150 டாலர்களாக உயர்த்தப்பட உள்ளதால் அதிக சம்பளம் கொடுத்து S Pass ஊழியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு புதிதாக NTS permit முறையை சமீபத்தில் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தி உள்ளதால், சிங்கப்பூர் நிறுவனங்கள் S Pass க்கு பதிலாக NTS permit மூலமாக வெளிநாடுகளில் இருந்து ஆட்சிகளை வேலைக்கு எடுக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
S Pass பெறுபவர்களுக்கான சம்பள விபரம் :
சிங்கப்பூர் அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொண்டு வரப்பட புதிய விதிமுறைகளின் படி, S Pass பெறுவதற்கு நிதித்துறை அல்லாத பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களின் குறைந்த பட்சம் சம்பளம் 3000 டாலர்களாகவும், அதிகபட்ச சம்பளம் 3150 டாலர்களாகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது. இதுவும் 23 வயதிற்கு மேல் உள்ளவர் என்றால் சம்பள வரம்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றால் அவர்களின் குறைந்தபட்சம் சம்பள தொகை 4500 டாலர்களாக இருக்க வேண்டும். புதிதாக S Pass க்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் சம்பளம் 3300 டாலர்களாக இருக்க வேண்டும்.
Dependant’s Pass பெறுவதற்கான தகுதி :
நிதித்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் சம்பள தொகை 3500 டாலர்களாகவும், அதிகபட்ச சம்பள தொகை 3650 டாலர்களாகவும் இருக்க வேண்டும். புதிய விண்ணப்பதாரர்களுக்கான சம்பள அளவு 3800 டாலர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சம்பள தொகை 6000 டாலர்களுக்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே தங்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவதற்கான Dependant’s Pass பெற முடியும்.
சிறு வியாபாரிகளுக்கு ஆபத்து :
S Pass க்கு சிங்கப்பூர் அரசு கொண்டு வர உள்ள புதிய விதிமுறைகள் காரணமாக hawker centre, coffee shop or food court போன்ற உணவு விற்பனை கடைகளில் இனி வெளிநாட்டினர் வேலை பார்க்க முடியாது. இது போன்ற சிறு விற்பனை நிலையங்களில் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை பார்க்க கூடிய நிலை ஏற்பட உள்ளது.