TamilSaaga

விரைவாக கட்டுமான துறையில் சிறந்து விளங்க இதோ சிங்கப்பூரின் “TOP 5” course list உங்களுக்காக…!

சிங்கப்பூரில் எல்லா விதமான கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் முக்கிய பணியிட பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு பயிற்சி தொழிலாளர்களின் வேலை நேர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். நீங்கள் சிங்கப்பூரில் கட்டுமான துறையில் வேலை செய்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் இதுபோன்ற பாதுகாப்பு பயிற்சிகளை முடித்து அதற்குரிய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் அரசின் MOM கட்டுமான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிப்பதோடு, அவர்களுடைய திறன்களை மேம்படுத்துவது என்பது போன்ற விஷயங்களை செய்கின்றது. MOM-ன் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு கட்டுமான தொழிலாளியும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியும் பாதுகாப்பு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற தங்களுடைய தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனரா என்பதை அந்த நிறுவனத்தினர் கண்டறிந்து, அதற்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும்.

இன்றளவில் சிங்கப்பூரின் பொருளாதாரம் கட்டுமான துறையை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ஆனால் இந்த கட்டுமான துறையில் சிக்கல்கள் மற்ற துறைகளைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே இருக்கிறது. அதாவது, பொதுவாக சிங்கப்பூரின் கட்டுமான தொழிலில் வெளிநாட்டவர்கள் பலர் ஈடுபடுத்த படுகின்றனர். அது மட்டுமன்றி கட்டுமான துறையில் ஆபத்துக்கள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் MOM அமைப்பு கட்டுமான துறையில் அதிக சிரத்தை எடுத்து, தொழிலாளர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய விளைகிறது விழைகிறது.

பொதுவாக இது போன்ற பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் உண்டு. இந்த பதிவில் நாம் தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் என்னென்ன? எந்த விதமான பயிற்சிகள் ஒவ்வொரு தொழிலாளர்களும் நிச்சயம் எடுத்திருக்க வேண்டும்? எங்கே எடுக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை பார்க்கலாம்

மிகவும் முக்கியமான ஐந்து பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் பின்வருமாறு தொழிலாளர்களுக்கான,

Construction Safety Orientation Course (RC), இது ஒரு எட்டு மணி நேர பயிற்சி வகுப்பு ஆகும். இந்த பயிற்சி வகுப்பை யார் யார் பெறலாம் என்றால், ஏற்கனவே கட்டுமான துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருப்பினும், தங்களுடைய CSOC அல்லது ACS சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பை மேற்கொள்ளலாம். நீங்கள் தொடர்ந்து இந்த கட்டுமான துறையில் ஈடுபட விரும்பினால் இந்த சான்றிதழ் அவசியம்

பெற வேண்டும். இது ஒரு மறு சான்றிதழ் பெரும் பயிற்சியாகும். இந்த மறு சான்றிதழ் பெற்ற பின் நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் கட்டுமான தொழிலில் ஈடுபடலாம்.

Apply Workplace safety & health in Construction Sites (ACS) என்ற பாதுகாப்பு பயிற்சி, கட்டுமான தொழிலில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என அனைவரும் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் சுமார் 18 மணி நேரம் நடைபெறும். இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் வேலை பாதுகாப்பில் போதுமான பயிற்சி பெற்றவராக கருதப்படுவர். இது போன்ற பயிற்சி பெறுபவர், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தங்களுடைய பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மேலும், இந்த பயிற்சியில் நீங்கள், உங்களுடைய தொழில் சார்ந்த பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திறன் மேம்படுத்துதல், மேலும் கட்டுமான தொழிலாளியாக உங்களுடைய பொறுப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம். உங்களுடைய பணியிட மாதிரிகளை வைத்து உங்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் அது மட்டுமின்றி, ஆபத்து காலங்களில் அலாரங்களை இயக்கவும் பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய பயிற்சி பெறுவதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் பணியிடத்தில் வேலை செய்ய முடியும். எதிர்பாராத விபத்துகளையும் சமாளிக்கும் திறன்களை பெற முடியும்.

Perform Work At Height (PWAH), என்ற பயிற்சி, பொதுவாக உயரத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கான பயிற்சி. ஆம் இன்றைய காலகட்டத்தில் கட்டுமான துறையில் அதிகபட்சம் உயர்ந்த கட்டிடங்களை அதிகம் கட்டுகின்றன. இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் இந்த PWAH பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உயரத்தில் பணிபுரியும் அபாயங்களை கற்பிப்பதோடு, அதற்குண்டான பாதுகாப்பு நடைமுறைகளையும் கற்பிக்கப்படும். மேலும் இந்த பயிற்சியின் மூலம் தடுப்பு அமைப்புகள் மற்றும் உயர் கட்டுமான உபகரணங்களை பயன்படுத்துவது என்பது போன்ற விஷயங்களில் பயிற்சி பெறுவர்.

Perform Metal Scaffold Erection (PMSE), என்ற இந்த பயிற்சி வகுப்பு சுமார் 38 மணி நேரம் நடத்தப்படும் பயிற்சியாகும். WSH 2006 Act-ன் படி, கட்டுமானத்துறையில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களும் இந்த பயிற்சி வகுப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் உலோகசாரக்கட்டுகளை இப்படி கட்டமைப்பது மற்றும் வேலை முடிந்த பின் அதை எவ்வாறு பிரித்தெடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்கள் நிறுவனத்தில் இந்த PMSE பயிற்சி பெற்றவரை மட்டுமே இந்த சாராக்கட்டுகளின் வேலைகளுக்கு பயன்படுத்த முடியும்.

Perform work in Confined Space Operation (PWCSO), என்ற 14 மணி நேர பயிற்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பெற வேண்டிய பயிற்சி ஆகும். இந்த பயிற்சி தொட்டிகள், குழாய்கள், சுரங்கங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கான பயிற்சி ஆகும். இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஆபத்துகள் அதிகம் வரலாம், எனவே இதற்கென தனி பயிற்சி பெற்ற பின்னரே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த பயிற்சியில் வரையறுக்கப்பட்ட இடங்களில் வேலை செய்வது, அவசர நிலைகளில் சரியாக செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்படும். வரையறுக்கப்பட்ட இடங்களில் தேவைப்படும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த பயிற்சியில் அறியலாம்.

மேலே சொன்ன பயிற்சிகள் அல்லாமல் இன்னும் நிறைய பயிற்சிகளை MOM அமைப்பு உருவாக்கியுள்ளது. இது போன்ற பயிற்சிகள் கட்டுமான துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் ஆகும். நீங்கள் கட்டுமான துறையில் பணிபுரித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது பணிக்குரிய விரும்புகிறீர்கள் என்றால் இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு அதற்குரிய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். இது போன்ற பயிற்சிகளை பெற விரும்பினால் நீங்கள் MOM அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சிகளை பெற வேண்டும். ஏனென்றால் அப்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதர்களுக்கே மதிப்பளிக்கப்படும். இது போன்ற பயிற்சிகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டணங்கள் வேறுபடும். நீங்கள் உங்களுக்கு தகுந்த மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சிகளை பெற்று தகுதியுள்ள தொழிலாளராக பணிபுரியலாம்.

Related posts