சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா அனுப்பி இதுவரை அளவில் யாரும் சாதனையை செய்து முடித்தது. இதற்காக உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரமும் இந்தியாவிற்கு கிடைத்தது. அதுவரை வளர்ந்து வரும் நாடாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்தியா உலக அளவில் ஒரு படிக்கு மேலே போய் நின்றது.
ஏனென்றால் விண்வெளியில் சாதனைகளை படைத்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட இந்த சாதனையில் செய்ய முடியாத நிலையில் இந்தியா முதல் முறை தோல்வி கண்ட பொழுதும் இரண்டாவது முறை அசால்டாக நடத்தி காட்டியது. இந்தியாவின் இந்த சாதனையை குருவிக்கும் வகையில் ஐஸ்லாந்து நாடானது இந்தியாவிற்கு மிக உயரிய விருது அளித்து கௌரவம் செய்துள்ளது. பல நாடுகள் நிலவிற்கு வெண்கலனை அனுப்பினாலும் இஸ்ரோவின் விண்கலம்தான் நிலவில் சல்பர் இருப்பதை முதல் முதலாக கண்டறிந்து உலகிற்கு சொன்னது இரண்டாவது சாதனையாகும்.
அதேபோல் உலக அளவில் அதிக தேவை இருக்கும் உலோகமான டைட்டானியம் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் விண்கலம் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் சந்திரயான் மூன்று வெற்றியை பாராட்டும் வகையில் ஐஸ்லாந்து அருங்காட்சியகமானது “2023 லீப் எரிக்சன் லூனார்” எனப்படும் உயரிய பரிசினை இந்தியாவிற்கு வழங்கி கௌரவத்துள்ளது.