TamilSaaga

சீனாவை மிரளவிடும் சென்னை… இன்னும் ஒரு வருடத்தில் நிகழவிருக்கும் சாதனை… தொழில் நுட்பத்தில் அடையப் போகும் அசுர வளர்ச்சி!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சென்னை நகரம் தமிழ்நாட்டின் முக்கியமான நகரமாக பார்க்கப்படுகின்றது. அதனால்தான் எவ்வளவு இயற்கை பேரிடர்கள் வந்தாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு தனது இயந்திர வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பி வருகின்றது.

சென்னை மட்டுமல்லாமல் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் ஸ்ரீ பெரும்பத்தூரும் முக்கிய நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் முக்கிய அமெரிக்க நிறுவனம் சென்னையில் தனது முதலீட்டை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் சீனாவில் பாதி பாதியாக பிரித்து ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை தயாரித்து வந்த பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் மொத்தமாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தப்படும் டெம்பர் கிளாஸ் எனப்படும் கொரில்லா கிளாஸ்சினை தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தியை ஆரம்பிக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 ஏக்கர் உற்பத்தியாளை நிறுவப்படுவதாக வெளியாகி உள்ளன. மேலும் ஐபோன் 17 உற்பத்தியும் இந்தியாவில் தொடங்க இருப்பதால் சர்வதேச அளவில் ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தியுள்ளது.

Related posts