TamilSaaga

40 ஆண்டுகள் கழித்து தாயையும் மகனையும் இணைத்த “பாச போராட்டம்”… சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சிங்கப்பூரில் இருக்கும் தாய் இரண்டு வயதில் பிரிந்த மகனை 40 ஆண்டுகளுக்கு பின்பு கண்டறிந்து வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் நடந்தேறி இருக்கின்றது.1980ல் தைவானில் பிறந்த அவர் தனது மகனுக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது காரணமாக ஊருக்கு வந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். பின்பு குடும்ப பிரச்சினை காரணமாக மண் சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது மகனுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாளை சிங்கப்பூரில் கழித்த அவர் மகனை ஒரு நாளாவது பார்க்க மாட்டோமா என ஏங்கியிருந்தார்.அதேசமயம் அவரது மகனும் தனது தாயை காண வேண்டும் என பல்வேறு முயற்சிகள் செய்த வண்ணம் இருந்துள்ளார். கடைசி முயற்சியாக சிங்கப்பூரின் பிரபல நாளிதழின் உதவியை நாடியுள்ளார்.இளம் வயதில் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிசம்பர் 15ஆம் தேதி சிங்கப்பூரின் நாளிதழில் வெளியிட செய்துள்ளார்.

பெண்மணியின் உறவினர்கள் அந்த நாளிதழை பார்த்து அவரிடம் கூறவே மகனிடம் வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.எத்தனை நாட்கள் நீ நன்றாக இருக்க வேண்டும் என கடவுளே வேண்டிக் கொண்டேன் என தாய் மகனிடம் கண்ணீர் மல்க பேசினார் விரைவில் மகனை சந்திக்க வேண்டியதாகவும் கூறியுள்ளார்.40 ஆண்டு காலம் கழித்து சிங்கப்பூர் தாய் மகனிடம் சேர்ந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts