சிங்கப்பூரில் கொரோனா தொற்று கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது என புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி வெளியான கணக்கெடுப்பின்படி டிசம்பர் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை கிட்டத்தட்ட 50,000 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய வார்த்துடன் ஒப்பிடும் பொழுது 75% அதிகம் என தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இனி தொற்றுக் குறித்த விவரங்கள் அடிக்கடி வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் நோயாளிகளை அட்மிட் செய்வதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தொற்று அதிகமாக இருந்து மருத்துவர் நோயாளியை அட்மிட் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நோயாளிகள் தங்க வைக்கப்படுவர் இதுவரை 80 நோயாளிகளை பராமரித்து கொள்ளும் அளவிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதல் இடங்களை ஒதுக்க அரசு முடிவு எடுத்துள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி வரை 23 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே வெளிநாடு செல்ல முடிவெடுக்கும் பயணிகள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் மக்கள் போதுமான இடைவெளியை கடைபிடித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு வலியுறுத்துள்ளது.