சிங்கப்பூரில் சாலை விபத்து பற்றிய செய்திகளை வாரம் ஒரு முறை நாம் கேள்விப்பட்டு வந்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்த பாடு இல்லை. அப்பர் தாம்சன் சாலையில் இரண்டு லாரிகள் மற்றும் கார் மோதி கொண்டதில் கார் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. காரை ஓட்டிய டிரைவருக்கு 41 வயது இருக்கும் எனவும் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் விபத்தை ஏற்படுத்திய இரண்டு லாரிகளை ஓட்டிய டிரைவரில் 54 வயதான ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான காரின் முன் பகுதி முழுதும் சேதமடைந்த பொழுதும் எமர்ஜென்சி பலூன் இருந்ததால் ஓட்டுநர் உயிர் தப்பினார் எனவும் சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.