TamilSaaga

சிங்கப்பூரில் பைப் தண்ணீரை அருந்துபவரா நீங்கள்… அப்போ இதை கட்டாயமா படிங்க!

நம் ஊர்களில் குடிநீர் என்றாலே அதனை தனியாக குடத்தில் பிடித்து சுத்தமாக மூடி வைத்து குடிப்பது தான் வழக்கம்.ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை அப்படி அல்ல. பெரும்பாலான மக்கள் பைப்புகளில் வரும் தண்ணீரை தான் குடிப்பதற்கும் அருந்த வேண்டும். அதாவது நம் ஊர்களில் கிச்சன் சிங்க்களில் இருந்து வரும் தண்ணீரை பாத்திரம் விளக்குவதற்கு பயன்படுத்துவோம் . ஆனால் சிங்கப்பூரில் அதைத்தான் அருந்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

முதல் முதலாக சிங்கப்பூருக்கு செல்பவருக்கு இதை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் சிங்கப்பூரில் நம்மூரைப் போல விலைவாசி இருக்காது. ஒரு லிட்டர் வாட்டர் கேன் வாங்க வேண்டும் என்றாலே நம்ம ஊர் காசுகளுக்கு 150 ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதனால் பெரும்பாலும் எல்லாரும் பைப் தண்ணீர் அருந்த பழகி விடுவார்கள். தற்பொழுது சிங்கப்பூரில் குழாயிலிருந்து வரும் நீரை அருந்துவது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்பட்டுமா என ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. குழாய் நீரில் நுண் கிருமிகளை அழிப்பதற்காக குளோரின் குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்து விவாதம் தற்பொழுது எழுந்து இருக்கின்றது.

என்றாலும் சிங்கப்பூரின் தண்ணீர் அமைப்பான பி யு பி இது குறித்து பயப்படத் தேவையில்லை என்றே கூறியுள்ளது. நீர் சுத்திகரிக்கப்படும் பொழுது சேர்க்கப்படும் குளோரின் என்ற ரசாயனத்தால் மனிதர்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து நன்யாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கின்றனர். எனவே ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியான பின்பே இது குறித்து தெளிவான தகவல்கள் வெளிப்படும்.

Related posts