இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக சிங்கப்பூரின் சில இடங்களில் லேசான புகைமூட்டம் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது புகைமூட்டமானது சில இடங்களில் அதிகரித்துள்ளதால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று வரை லேசாக புகைமூட்டம் காணப்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ள நிலையில் இன்று பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று பிற்பகல் நிலவரப்படி சிங்கப்பூரின் கிழக்கு பகுதிகளில் காற்றின் தூய்மை கேடு குறியீடு ஆனது 114 ஆகவும், மத்திய வட்டாரத்தில் தூய்மை கேடு குறியீடு 104 ஆகவும் பதிவாகியுள்ளது. பொதுவாக தூய்மை கேடு குறியீடு ஆனது 101 க்கு மேல் இருந்தால் அந்த பகுதியில் ஆரோக்கியமற்ற நிலை எட்டியுள்ளது என கருதப்படும். இந்நிலையில் தற்பொழுது 101 க்கு மேல் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தோனேசியாவில் காட்டுத்தீ பற்றி எரியும் இடங்களில் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது கவனமாக முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மிகவும் தேவைப்பட்டால் தவிர அனாவசியமாக வெளியே வர வேண்டாம் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.