TamilSaaga

சிங்கப்பூரில் 12 மணி நேரம் அயராது உழைக்கும் லாரி டிரைவர்கள்… அவர்களுக்கு எவ்வளவு ஓய்வு கொடுக்க வேண்டும் என நடைபெற்ற விவாதம்!

சிங்கப்பூரில் வாழும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் டிரைவராக வேலை செய்து வருகின்றனர். சிங்கப்பூரை பொறுத்தவரை நம் ஊரை போல் அல்லாமல் எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகின்றது. மேலும் டெலிவரி டிரைவராக இருந்தால், ஒவ்வொரு இடத்திலும் பொருள்களை ஏற்றி, இறக்கி அதோடு டிரைவர் வேலையும் சேர்ந்து செய்ய வேண்டும்.

நம் இந்தியா போன்ற நாடுகளில் இந்த வேலையை செய்வதற்கு தனியாக கிளீனர் ஒருவர் உடன் வருவார். ஆனால் சிங்கப்பூரில் அப்படி அல்ல இரண்டு வேலைகளையும் ஒரே ஆளாக செய்பவர்கள் தான் அதிகம். இவ்வாறு இந்த இரு வேலையும் ஒரே நேரத்தில் செய்யும் பொழுது நான் டிரைவர் மிகவும் களைப்பாக வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு இடை இடையே இடைவெளி விடும்படி முதலாளிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சட்டத்தின் படி ஆறு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து ஒருவர் வேலை செய்யக்கூடாது என்ற விதிமுறை உண்டு. இவ்வாறு இரண்டு வேலை செய்யும் ஒருவர் மீண்டும் லாரி ஓட்டுவதற்கு முன்னால் குறைந்தது அரை மணி நேரம் ஓய்வெடுக்க விதிமுறையில் இடம் உண்டு எனவே முதலாளிகள் அதை அனுமதிக்க வேண்டுமென வேலையிட பாதுகாப்பு சட்டம் தெரிவித்துள்ளது.எடுத்துக்காட்டாக ஒரு லாரி ஓட்டுநர் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வாகனம் ஓட்டினால் அவருக்கு 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் லாரி ஓட்டுனர்கள் வேலையின் தன்மை மற்றும் அதன் கடினத்தை பொறுத்து அவர்களுக்கான ஓய்வு நேரத்தை முதலாளிகள் மாற்றிக் கொடுக்கலாம் எனவும் எடுத்துரைத்துள்ளது.

Related posts