TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்கு போணும்… Skill வேணாம் ஆனா சம்பளமும் பெத்த தொகையா கிடைக்கணுமா? அப்போ இந்த கோர்ஸ் பண்ணுங்க… வேலையும் கியாரண்டி தான்!

சிங்கப்பூர் வேலைக்கு அழைந்து கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு முதலில் என்ன வேலை தேடுவது என்பதே குழப்பமாக இருக்கும். ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் கூட அது சம்மந்தமான வேலைக்கு வந்துவிடலாம். சாதாரணமாக டிகிரி படித்தவர்களோ, அல்லது பள்ளி படிப்பை மட்டும் முடித்தவர்கள் தான் இதில் அதிகமாக குழம்புவார்கள். அவர்களுக்கு Skill ஒன்றே தீர்வு என நினைத்தால் கண்டிப்பாக இல்லை. அது தவிர சிங்கப்பூரில் நிறைய வேலைகள் இருக்கிறது. அதற்கு நீங்க கோர்ஸ் முடித்தால் அதுவும் சின்ன நாட்களில் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.

சிங்கப்பூர் வேலைக்கு நிறைய கோர்ஸ்கள் இருக்கிறது. அதை முடிக்கும் போது உங்களால் அது சார்ந்த பணிகளில் எளிதாக வேலை வாங்கி விட முடியும். இதற்கு நீங்க ஸ்கில் அடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்த கோர்ஸிற்கு பல லட்சமெல்லாம் செலவுகள் இருக்காது. அப்படி ஒரு கோர்ஸ் தான் forklift operator. இதை எப்படி படிக்கலாம்? முடித்தால் என்ன சம்பளம் கிடைக்கும்? சாதகம் என்ன அதில் இருக்கும் பாதகம் என்ன எல்லாத்தையுமே தெரிஞ்சிக்கோங்க. அப்போ தான் எளிதில் முடிக்கலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 3000 வெள்ளி சம்பளம் தரும் SPass… உங்களுக்கு கிடைக்குமா? சில நொடிகளில் தெரிஞ்சிக்கலாமா? வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிங்க சூப்பர் வேலையோட செட்டில் ஆகுங்க!

forklift operator பெரிய பொருட்களை fork வடிவில் இருக்கும் வண்டியின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து செல்பவர். இதற்கு லைசன்ஸ் எடுக்க வேண்டும். இந்த லைசன்ஸினை எடுக்க இருப்பவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கிறது. இந்தியாவில் இருந்து வரும் ஊழியர்களுக்கு அங்கிருந்த லைசன்ஸை சிங்கப்பூர் மாற்றும் போது 3C தான் கொடுப்பார்கள். அதை வைத்தே forklift operator எடுக்கலாம். லைசன்ஸே இல்லாதவர்களுக்கு வேறு வழிகளும் இருக்கிறது.

3c லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் அந்த லைசன்ஸினை வைத்து கோர்ஸில் இணைந்தால் 3 நாட்கள் தான் வகுப்புகள் இருக்கும். அதிகபட்சமாக 350 சிங்கப்பூர் டாலர் வரை கோர்ஸ் கட்டணம் இருக்கும். முதல் நாட்கள் தியரி, இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் காலை வரை பிராக்டிக்கல். மாலையில் தேர்வு வைத்து முடித்து விடுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் R1 ஊழியர்களுக்கு தான் demand… சம்பளம் மட்டுமே $1600 வெள்ளி… அப்படி என்ன ஸ்பெஷல்… எப்படி அப்ளே செய்யலாம்?

லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு வகுப்பு 4 நாட்களாக இருக்கும். கட்டணம் கூட 200 சிங்கப்பூர் டாலர் வரை அதிகமாக கேட்கப்படும். நீங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இன்ஸ்டியூடில் இந்த கோர்ஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த கோர்ஸ் இருக்கும் இன்ஸ்டியூட்டை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலான இன்ஸ்டியூட்களில் வார நாட்களில் தான் வகுப்புகள் நடைபெறுகிறது. இன்ஸ்டியூட்டினை பொறுத்து நாட்களும், கட்டணமும் மாறுபடும்.

இந்த வேலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு 1500 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளமாக கிடைக்கும். டிப்ஸ் மற்றும் ஓவர் டைமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாளைக்கே 22 சம்பளமாகவும் 5 வெள்ளி கூட ஒரே நாளில் டிப்ஸ் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. டிப்ஸ் மட்டும் அனைவருக்குமே கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts