வெளிநாட்டு வேலைக்காக சிங்கப்பூர் வந்த ஊழியர்கள் பல விதத்தில் நிம்மதியாக இருந்தாலும் சில பிரச்னைகளை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர். ஸ்கில் அடித்த வேலைக்கு வந்த பல வருடம் சிங்கப்பூரில் வேலை தான் வாழ்க்கையே மாறிவிடும் என நம்பும் சிலருக்கு இப்போது சொல்லப்படும் தகவலால் பெரும் பயம் கூட உருவாகலாம்.
சிங்கப்பூரில் பல வொர்க் பெர்மிட்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஒவ்வொரு பாஸிற்கு ஒவ்வொரு வகையான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. படித்தவர்கள் முதல் படிக்காமல் கூட சிங்கப்பூர் வந்தால் பிழைத்து கொள்ளலாம் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் சிலரும் பிரச்னையில் தான் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் மக்களின் Daily Doseஆக இருக்கும் MRT… 2030க்குள் நடக்க இருக்கும் மாற்றங்கள்.. இத எப்படி மிஸ் பண்ணலாம் நீங்க
பொதுவாக ஒரு நல்ல ஏஜென்ட்டினை பிடிப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அவர்களை பிடித்து நல்ல கம்பெனியை போட சொல்லி சிங்கப்பூர் வந்து இங்கு வேலை செட்டில் ஆகாமல் நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வேலையில் சரியாக செட்டில் ஆனவர்கள் இங்கையே 10 வருடம் இருக்கும் முடிவில் இருப்பவர்களுக்கு கம்பெனி தான் பெரிய ஷாக்கினை கொடுக்கும்.
அதாவது பொதுவாக ஒரு வொர்க் பெர்மிட் 2 வருடங்கள் மட்டுமே வேலிடிட்டியில் கொடுக்கப்படும். அதன் பின்னர் அதற்கேற்றவாறு புதுப்பித்து கொண்டே வருவார்கள். சிலருக்கு ஒரே கம்பெனியில் இருக்க சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு கம்பெனிக்கு மாற்றல் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களின் வேலிடிட்டி முடியும் 40 நாட்களுக்குள் அவர்களால் ட்ரான்ஸ் லெட்டர் இல்லாமலே வேறு கம்பெனிக்கு மாறுக்கொள்ள முடியும் என்பது momல் சொல்லப்பட்டு இருக்கும் விதி.
ஆனால் இந்த விதியினை பல நிறுவனங்கள் மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அவர்களின் வொர்க் பெர்மிட் வேலிடிட்டி முடியும் நாளில் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கே வந்து அவர்களை விமானம் ஏற்றி விட்டு தான் நகர்கிறார்கள். இதுகுறித்து MOMஆல் கூட பெரிதாக இந்த பிரச்னையை சரி செய்ய முடியாத நிலை என்று கூறுகிறார்கள்.
இதனால் 2 வருடம் கழித்து புதுப்பிக்கப்படலாம். இல்லை நீங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப வேண்டி இருக்கும். இது நீங்கள் சேரும் நிறுவனத்தினை பொறுத்தே அமையும். மேலும் Skill அடித்து சிங்கப்பூர் வந்த ஊழியர்கள் என்றால் இந்தியா போய்விட்டு வரும் போது செலவுகள் ரொம்பவே குறைவாக இருக்கும். மற்ற பாஸ்களில் மீண்டும் சிங்கப்பூர் திரும்பும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட முதல் முறை கேட்கப்பட்ட அதே தொகை இருக்கும் என்பதால் ரொம்பவே கவனமாக இந்த பிரச்னையை கையாள வேண்டும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.