சிங்கப்பூரில் வேலை செய்து நல்ல வாழ்க்கையை பெறலாம் என்ற நம்பிக்கையில் பலர் நாட்டில் கால் எடுத்து வைக்கின்றனர். இதில் ஒரு சிலர் வாழ்க்கையில் கிடைத்த நல்ல வாழ்க்கையில் கூட எதுவும் பிரச்னை செய்து மொத்தத்தையும் மோசமாக மாற்றி விடுகின்றனர். இதை போன்ற ஒரு சம்பவம் நடந்த ஒரு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.
சிங்கப்பூரில் டெக்னீசியன்களாக வேலை செய்து வந்தவர்கள் எழிலரசன் நாகராசன், ராதாகிருஷ்ணன் இளவரசன், பாலசுப்ரமணியன் நிவாஸ், முருகன் கொத்தாலம் ஆகிய நான்கு தமிழர்கள். இவர்கள் ஆல்டெக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி சம்பவத்தன்று நால்வரும் காவல்துறை தேசிய சேவைத் துறை கட்டடத்திற்கு பணிக்கு சென்றனர்.
இதையும் படிங்க: கொரோனாவுக்கு குட்பை சொல்ல இருக்கும் சிங்கப்பூர்… தளர்த்தப்பட்ட விதிகள்… நீங்க மிஸ் பண்ணவே கூடாத 6 விஷயங்கள்
அப்போது, அங்கிருந்த கேபிள் ஒயர்களை அறுத்து விற்பனை செய்ய முடிவெடுத்தனர். இதை தொடர்ந்து, இளவரசனும், எழிலரசனும் ஒயர்களை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்பி இருக்கின்றனர். அப்போது அருகில் இருந்த கட்டத்தின் ஏணியில் நின்ற முருகனுக்கு திடீரென மின்சாரம் தாக்கியது. நிவாஸ் ஏணியை உதைத்து அவரை காப்பாற்ற நினைத்த போதிலும் முருகன் இறந்து விட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றத்தினை ஒப்புக்கொண்ட எழிலரசன் மற்றும் இளவரசனுக்கு 1000 சிங்கப்பூர் டாலர் அபராதமும், நிவாசுக்கு 1500 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அயல்நாட்டில் தமிழ்நாட்டினை களங்கப்படுத்திய தமிழர்களை நெட்டிசன்கள் வசைப்பாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூரில் ஓயாத வேலை… 39 வயதில் நடக்க இருந்த திருமணம்… மயங்கி விழுந்த இடத்தில் உயிரிழந்த தமிழர்!
இவர்களின் பெயர்களை தவிர மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து வொர்க் விசாவில் இருக்கிறார்களா இல்லை சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பப்பட்டு விட்டார்கள் என்பது குறித்த முழுதககவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.