இந்தியாவின் புதிய அறிவிப்பால் தற்போது சிங்கப்பூர் விமான போக்குவரத்தே சற்று ஸ்தம்பித்து தான் இருக்கிறது. இதனால் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. இதுகுறித்த தகவல்களை விவரமாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவில் தொற்றுபரவல் அதிகரித்து இருக்கும் நிலையில், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு RT-PCR டெஸ்ட் எடுத்து ஏர்சுவேதா போர்ட்டல் பதிவிட கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் பலரும் குழப்பமாக மனநிலைக்கு சென்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்திருந்த பலர், இந்த திடீர் அறிவிப்பால் பயணத்தினை தள்ளிப்போட்டு டெஸ்ட் எடுக்கும் முடிவில் இருக்கின்றனர். அதே நேரத்தில் சிலர், மொத்தமாக இந்தியாவிற்கு செல்ல இருக்கும் பயணத்தினையுமே ரத்து செய்து விட்டனராம். தொற்றுபரவல் அதிகரித்து இருக்கும் நிலையில், தமிழகம் சென்று மேலும் கட்டுபாடுகள் வந்துவிடும் என்ற ஐயத்தில் இருக்கிறார்களாம். இதனால் தமிழ்நாட்டில் சிக்கி கொண்டால் மேலும் பிரச்னையாகி விடும் என்பதால் இதை தவிர்த்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் பல விமானங்களின் டிக்கெட் முழுதாக நிரம்பாமல் இயக்க வேண்டியதாக இருந்தது. இதனை தொடர்ந்து, விமான டிக்கெட்களின் விலையை கணிசமாக குறைத்து இருக்கின்றன பல ஏர்லைன்ஸ். இப்படி ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் எப்போதும் போல இயங்கி கொண்டு இருக்கிறதாம். விமான டிக்கெட் விலையில் கூட எந்தவித மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.