சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கும் பலரும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ skilled test தான். இதில் ஏமாறு வேலை என்பதே பெரும்பாலும் கிடையாது. இன்ஸ்ட்யூட்டில் டெஸ்ட் அடித்த சான்றிதழ் வாங்கிவிட்டால் சிங்கப்பூரில் கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என நம்புபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் சிலருக்கு skilled test னா என்ன? எப்படி இருக்கும் என ஏகப்பட்ட குழப்பம் இருக்கும். நம்ம மார்க்குலாம் கம்மியா இருந்தா அதெல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்குமானு சந்தேகம் இருந்தா இத படிங்க முத.
சிங்கப்பூரில் அதிகம் பேர் வேலைக்காக அப்ளே செய்யும் skilled test முடித்தால் சர்டிபிக்கேட் கொடுப்பது முதலில் ஸ்லிப் வடிவில் தான் இருக்கும். சான்றிதழாக தரமாட்டார்கள். அந்த ரிசல்ட் ஸ்லிப்பில் உங்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் நீங்கள் தேர்வு செய்த இன்ஸ்ட்யூட் குறிப்பிடப்பட்டு இருக்கும். நீங்கள் தேர்வு செய்த trade குறித்தும் அதில் இடம்பெற்று இருக்கும். மேலும், இதில் நீங்கள் எடுத்த மதிப்பெண் குறித்து எந்த ஒரு தகவலும் இடம்பெறாது.
பாஸ் என்று மட்டும் தான் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் கம்மி மார்க் வருமா? அது சர்டிபிக்கேட்டில் இருக்காமா என கவலையே படாதீர்கள். இந்த சர்டிபிக்கேட்டினை BCAல் இருந்து வழங்குவார்கள். Building and Construction Authority தரும் இந்த சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள் கட்டடம் சம்மந்தப்பட்ட பணிகள் அனைத்திலும் வேலை செய்யலாம்.
தமிழ்நாட்டில் நீங்க டெஸ்ட் அடிக்கும் போது, உங்களுக்கு கொடுக்கப்படும் ரிசல்ட் சிலிப்பில் பாஸ்போர்ட் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன்மூலம் ரிசல்ட் வந்தவுடன் அது உங்களின் பாஸ்போர்ட்டின் தகவலுடன் இணைக்கப்பட்டு விடும். மேலும், இன்ஸ்ட்யூட்கள் உங்களுக்கு வெறும் ஸ்லிப் மட்டுமே தருவார்கள். இதன் அசல் சான்றிதழை நீங்கள் வேலைக்காக சிங்கப்பூர் வந்தவுடன் BCAல் வந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் கம்பெனியே இதற்கு கூப்பிட்டு சென்று விடுவார்கள்.
மேலும், நீங்கள் பயிற்சிக்காக இன்ஸ்ட்யூட்களின் வகுப்புகளின் attendance 75 சதவீதம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சான்றிதழில் S எனக் குறிப்பிட்டு இருந்தால் 18 வருஷமும், R1 எனக் குறிப்பிட்டு இருந்தால் 24 வருஷமும் Validity இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.