சிங்கப்பூரில் வேலைக்காக வரும் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பாஸிற்கு ஏற்ப 2 லட்சத்தில் துவங்கி 6 லட்சம் வரை ஏஜென்சிக்கு கட்டணமாக கொடுத்து வருகிறார்கள். பலர் இதற்காக ஏகப்பட்ட கடனை வாங்கி சிங்கப்பூர் வந்து 2 வருடம் கஷ்டப்பட்டு கடனை அடைக்கவே பலருக்கு போதும் போதும் என ஆகி விடுகிறது.
PCM permit துவங்கி E-Pass வரை படித்தவர்களும், படிக்காதவர்களும் சிங்கப்பூருக்கு வேலைக்காக வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கட்டணம் என்னவோ லட்சத்தில் தான் இருக்கிறது. ஏனெனில், சிங்கப்பூரில் நீங்க ஒரு ஏஜென்ட்டினை பிடித்து அவரிடம் கல்வித்தகுதி, பாஸ்போர்ட்டினை கொடுத்து வேலை தேட சொல்வீர்கள். அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் ஏஜென்ட்டினையோ, ஏஜென்சியினையோ நாடுவார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கம்பெனியில் வேலை தேடி கண்டுபிடித்த பிறகு உங்களுக்கு IPA வரும்.
ஆனால் சிங்கை மனிதவளத்துறை சிங்கப்பூர் ஏஜென்சிகள் ஒரு ஊழியரிடம் வேலை வாங்கி கொடுக்க கட்டணமாக ஒரு மாதத்தில் இருந்து அதிக பட்சமாக இரண்டு மாத சம்பளத்தினை மட்டுமே கட்டணமாக வாங்க வேண்டும். ஒரு மாத கட்டணம் என்பது ஒவ்வொரு பாஸிற்கும் ஒவ்வொரு மதிப்பில் அமைந்திருக்கும்.
அதாவது, pcm permit, skilled test முடித்து சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்களுக்கு $600 சிங்கப்பூர் டாலர் மட்டுமே OT இல்லாமல் சம்பளம். இது இந்திய மதிப்பில் 37000 ரூபாய் மட்டுமே. இந்த கட்டணத்தினை MOM ஒரு விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி MOM சொல்லும் கட்டணத்தினை விட அதிகம் வாங்குவதும் சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. இருந்தும் ஏன் இத்தனை லட்சங்கள் என்ற கேள்வி எழுகிறது தானே?
மேலே கூறிய கட்டணம் சிங்கப்பூரில் செயல்படும் ஏஜென்சிக்கு தான். உங்களின் சொந்த ஊரில் இருக்கும் ஏஜென்ட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாகவே பெறுவார். வொர்க் பெர்மிட் விசா அப்ளே செய்ய $35 சிங்கப்பூர் டாலரும், மற்ற விசாக்களுக்கு அதிகபட்சமாக $105 சிங்கப்பூர் டாலர் தான் கட்டணமாக MOMஆல் நிர்ணியிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா கணக்கினை வைத்து யோசித்தால் அதிகாரப்பூர்வ கட்டணமே 1 முதல் 1.5 லட்சத்திற்குள் தான் இருக்க வேண்டும். இதனால் தான் நல்ல ஏஜென்ட்டினை தேடுவது முக்கியம். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் பேரம் கூட பேசுவதால் உங்களின் பல லட்சங்கள் தப்பிக்கும்.
இந்த கட்டணங்கள் அனைத்தும் Mom தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தொழிலாளர்கள் உதவிக்கு MOM ஐ தொடர்பு கொள்ளலாம். அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://service2.mom.gov.sg/efeedback/Forms/eFeedbackWithReferrer.aspx?option=13 இந்த லிங்க்கினை கிளிக் செய்து உங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.