TamilSaaga

சிங்கப்பூரில் வேலியிடத்தில் பணியாளர்கள் வழுக்கி விழும் விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி

வேலை செய்யும் இடங்களில் பணியாளர்கள் வழுக்கி விழுவது, கால் இடறி தவறி விழுவது மற்றும் உயரமான இடங்களில் வேலை செய்யும் போது தவறுதலாக கீழே விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் தொழில் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சதவீதத்துக்கு மேலாக இது போன்ற விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

கொரோனா காலத்தில் மக்கள் வேலையின்றி இருப்பதால் தற்போது அந்த சதவீதம் குறைந்து காணப்பட்டாலும் உயிருக்கு பாதிப்பில்லாமல் காயங்கள் ஏற்படும் அளவிலான விபத்துக்கள் நடக்க இதுவே பிரதான காரணமாக உள்ளது.

இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் துறைகள் மற்றும் சூழல்களை கண்டறிந்து அவற்றில் எப்படி கவனமாக விபத்துக்கள் இன்றி வேலை செய்வது என்பதை கற்றுக்கொடுக்க வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் அந்த நிறுவனங்களுக்கு கற்றல் பயணம் ( Learning Journey) ஏற்பாடுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதவள துறையின் மூத்த துணை அமைச்சரான திரு.ஸாக்கி முகமது அவர்கள் ஏறத்தாழ 300 பேரிடம் இந்த கற்றல் பயண திட்டம் குறித்து கலந்தாலோசித்து உள்ளார்.

மேலும் அவர் இது பற்றி கூறும்போது, ” கடினமான இந்த கோரோனா காலகட்டத்திலும் விபத்துக்கள் இல்லாமல் வேலை செய்யும் இடங்களை பாதுகாப்பாக வைத்திட முனைப்புடன் செயல்படுகிறோம். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் துறை, போக்குவரத்து மற்றும் தளவாடம் சார்ந்த துறைகள் இது போன்ற ஆபத்துக்களை பிற நிறுவனங்கள் எப்படி கையாள்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த கற்றல் பயணம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிங்கப்பூர் அரசு ஏஜென்சி மூலம் பயன்பாட்டில் உள்ள இணையதளத்தில் மின்கட்டணமுறை கற்றல் பயணம், பேரங்காடி கற்றல் பயணம், நூலக கற்றல் பயணம் மற்றும் லேப் ஆன் வீல்ஸ் போன்ற கற்றல் பயணங்களை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts