சொந்த ஊரில் டிகிரி படிக்க போறீங்களா… வெயிட் வெயிட்… சிங்கப்பூரில் படிச்சு இங்கையே வேலை பார்க்க முடியும்.. அதற்கு தான் இருக்கு student visa…
சொந்த நாட்டில் படிச்சு விட்டு அனுபவம் இருந்தோ இல்லாமலோ வேலை தேடுபவரா நீங்க? உங்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். உங்க படிப்பை சிங்கப்பூரில் படித்து விட்டு இங்கையே நீங்க வேலையில் சேர்ந்து விடலாம். இதில் என்னென்ன இருக்கும்? எப்படி அப்ளே செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படிங்க.
படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவது தான் student visa. சிங்கப்பூரில் பெரிய அளவிலான கல்லூரிகளும் இருக்கிறது. சின்ன அளவிலான கல்லூரிகளும் இருக்கிறது. 6 மாதம் முதல் 20 மாதம் வரை டிப்ளமோ கோர்ஸ் படிக்கலாம். இதில் சில கல்லூரிகள் OJT எனப்படும் On Job Training வாங்கி கொடுப்பார்கள்.
6 மாதம் படித்துவிட்டு 6 மாதம் உங்க கல்லூரி நிர்வாகமே உங்களுக்கு 6 மாதம் வேலை வாங்கி கொடுக்கும். Hospitality, Food, Marketing, Sales இதுபோன்ற துறைகள் இருக்கும். சில கல்லூரிகளில் கட்டணத்தினை installmentsல் கட்டவும் ஒப்புக்கொள்கிறார்கள்.
கல்லூரிகளில் 6 மாத கோர்ஸ்களுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமாக தான் கட்டணமாக வாங்குகின்றனர். 16 முதல் 20 மாத கோர்ஸ்களுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமாக கட்டணம் கேட்கப்படுகின்றது. முதலில் சிங்கப்பூரில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி என ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு ஆன்லைன் மூலமாக அப்ளே செய்யுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கு தமிழ்நாட்டிலேயே அலுவலகம் இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு முதலில் $30 மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு student visa அப்ளே செய்து கொடுப்பார்கள். சில கல்லூரி அட்மிஷன் நேரத்திலேயே முழு கட்டணத்தையும் கேட்பார்கள்.
சிலர் கல்லூரியில் சேர்ந்த பின்னரே கட்டணத்தினை கேட்பார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 3 மணி நேரம் மட்டுமே கல்லூரி நடைபெறும். student visaல் எங்கு வேண்டும் என்றாலும் தங்கி கொள்ளலாம்.
சிங்கப்பூரில் படித்தவர்களுக்கு உடனே s-pass மாற்றி தந்து விடுவார்கள். public கல்லூரியில் நீங்க படிச்சிக்கொண்டே பார்ட் டைம் வேலை செய்யலாம். private கல்லூரியில் படிக்கும் போது பார்ட் டைம் வேலை பார்க்க கூடாது. இது சட்டப்படி குற்றமாகும்.
நீங்க படிப்பு செலவுடன் போக்குவரத்து செலவு, உணவு மற்றும் தங்குமிடத்துக்கான செலவுகள் குறைந்தபட்சம் $700 டாலர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.