சொந்த ஊரில் சம்பளம் குறைவாக வாங்கும் ஊழியர்கள் சிங்கப்பூர் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் டெஸ்ட் அடிக்க முடிவு செய்கிறார்கள். அதை தொடர்ந்து Skill Test இன்ஸ்டிடியூட்டில் காசை கட்டி சேர்ந்து விடுவார்கள். அங்கையே பல கஷ்டம் இருக்கும். லட்சத்தில் காசை கட்டினால் கூட கொசுக்கடியில் 100 பேருக்கு இடையே தான் தூங்க வேண்டும். அடி, உதை வாங்கி போராடி டெஸ்ட் முடித்து சர்டிபிகேட்டை வாங்கி விடுகிறார்கள்.
ஆனால் இங்கு தான் பிரச்னையே துவங்குகிறது. இப்படி டெஸ்ட் அடித்த ஏராளமானவர்கள் சிங்கப்பூருக்கு வருவது இல்லையாம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இங்கு விட வேறு நாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது. இல்லை டெஸ்ட் அடிக்க மட்டுமே காசு இருந்தது. மற்ற செலவுகளுக்கு கடன் வாங்குவது சிரமம் எனக் கூறி பலரும் டெஸ்ட் சர்டிபிக்கேட் வைத்துக்கொண்டே சிங்கப்பூர் செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.
இதில் வொர்க் பெர்மிட்டிற்கு அட்வான்ஸே வாங்காமல் எடுத்து கொடுத்த ஏஜென்டின் நிலை மோசமாகி இருக்கிறது. பெர்மிட் கிடைத்த பின்னரும் ஊழியர்கள் சிங்கப்பூர் வர குடும்பத்தின் நிலையை காரணம் காட்டி விலகிவிடுகின்றனர். சிங்கப்பூரில் இருக்கும் ஏஜெண்டிகள் 300 சிங்கப்பூர் டாலர் செலவு செய்திருப்பதால் அந்த ஊழியர்களை வர ஏற்பாடு செய்யுங்கள் என தமிழ்நாட்டு ஏஜென்டுகளிடம் முறையிட வேண்டியதாகி இருக்கிறது.
இந்நிலையில், டெஸ்ட் அடித்தவர்களின் கணக்கில் இருக்கும் அனைவரும் சிங்கப்பூர் வந்தவுடன் மீண்டும் கோட்டா அறிவிக்கலாம். அதுவரை இதனை நிறுத்தி வைக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த பிரச்சனையால் டெஸ்ட் நடவடிக்கையிலே சில மாற்றம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இதில், சிங்கப்பூர் வர டெஸ்ட் அடித்து சான்றிதழ் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறிப்பிட்டு கால அளவு நிர்ணியிக்கப்படும். அதற்குள் சிங்கப்பூர் வராமல் இருப்பவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கேன்சல் செய்துவிடுவார்களாம். இதனால் புது வேலையாட்களுக்கான கோட்டா அதிகமாகும்.
இதையடுத்து, சிங்கப்பூர் வந்து சில நாட்கள் கெடு கொடுத்து அங்கையே ட்ரைனியிங் கொடுத்து டெஸ்ட் அடிக்க வைக்கவும் செய்யலாம் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. இதுவும் சிங்கப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு சிரமம் இல்லாமல் அமையும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் இன்னும் இறுதி செய்யப்படாமல் தான் இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.