TamilSaaga

50,000 லாரிகள்.. ஜனவரி.1 முதல் Rain Covers கட்டாயம்.. பின்னால் அமர்ந்து செல்லும் ஊழியர்கள் மேல் ஒரு சொட்டு மழை நீர் படக்கூடாது – சிங்கப்பூர் அரசு உத்தரவு!

SINGAPORE: ஊழியர்களை பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்லும் லாரிகளில், வரும் ஜனவரி 1 முதல் இனி மழை கவர்கள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் (MOM), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் போக்குவரத்து காவல்துறை (TP) அதிகாரிகள் தரப்பில் கூட்டாக இன்று (அக்டோபர் 19) வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அதிகாரிகள் கூறுகையில்,

ஜனவரி 1, 2023 முதல் புதிதாக பதிவு செய்யப்பட்ட லாரிகளில் இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜூலை 1, 2023 முதல் பயன்பாட்டில் உள்ள இலகுரக லாரிகளில் (அதிகபட்ச எடை 3,500 கிலோவுக்கு மிகாமல்) இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜன. 1, 2024 முதல் பயன்பாட்டில் உள்ள கனரக லாரிகளில் (அதிகபட்ச எடை 3,500 கிலோவுக்கு மேல்) இந்த rain covers பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 நிலவரப்படி சுமார் 50,000 லாரிகள் சிங்கப்பூரில் இயங்கி வருகின்றன. தற்போது அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

நீர்ப்புகாத வகையில், இந்த கவர்கள் அமைக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் தங்களது லாரிகளில் பின்பக்கத்தை தவிர்த்து, ஏற்கனவே கவர் செய்துவிட்டன. தற்போது இந்த உத்தரவை அடுத்து, பின்பக்கமும் இனி அவர்கள் மூட வேண்டும். இதை அமைக்க ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை ஆகும் மற்றும் லாரி மற்றும் கவரின் அளவைப் பொறுத்து $200 முதல் $700 வரை இதற்கு செலவாகலாம்.

Related posts