SINGAPORE: சிங்கையின் மனித வளத்துறை அமைச்சகம், ஊழியர்கள் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்த நிறுவனத்துக்கு Stop Work ஆர்டர் கொடுத்துள்ளது.
இதுகுறித்து மனிதவளத்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஆகஸ்ட் 25, 2022 அன்று, சினெர்ஜி-பிஸ் (Synergy-Biz ) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் லாரி ஓட்டுநருக்கு ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. forklift மூலம் ஏற்பட்ட இந்த விபத்தில் அவர் பலியானார்.
இதையடுத்து மனித வளத்துறை அமைச்சகம், மறுநாளே…. அதாவது 26 ஆகஸ்ட் 2022 அன்று Synergy-Biz இன் வளாகத்தை ஆய்வு செய்தது. இதில், தொழிலாளர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பல பாதுகாப்பற்ற நிலைமைகள் அங்கு இருந்ததை கண்டறிந்தது.
இதையடுத்து, Synergy-Biz நிறுவனத்துக்கு Stop Work உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த நிறுவனம் தங்களின் அனைத்து குறைகளையும் சரி செய்யும் வரை, அங்கு எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விதிமுறை மீறல்களுக்காக சினெர்ஜி-பிஸுக்கு $6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய பல பாதுகாப்பு குறைபாடுகளை, கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அந்நிறுவனம் எளிதில் சரி செய்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதனால் தான் அந்நிறுவனத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனித வளத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.