TamilSaaga

துரத்திய வறுமை… சிங்கப்பூரில் 1.5 லட்சம் பணத்தை இழந்த பெண்ணுக்கு… வெறும் 50 நபர்களால் குவிந்த 11.90 லட்சம் நிதியுதவி – ஓடி வந்து அள்ளிக் கொடுத்த மனசு!

SINGAPORE: இந்த செய்தியை படிக்கும் பொழுது, நம்மை ஒரு சக்தி இருப்பது உண்மை என்பது புரியலாம். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரோ, இல்லையோ.. அது தெரியாது. ஒருவேளை அப்படி இருக்கும் பட்சத்தில், கடவுள் என்பதை, இவர்களின் முகமாக நாம் பார்க்க முடிகிறது. ஏனெனில், ஆபத்தின் போது உதவுபவர் தானே கடவுள்..!

சிங்கப்பூரில் வசித்து வருபவர் மரீனா. இவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், 13, 8, 6 ஆகிய வயதில் மூன்று ஆண் பிள்ளைகளும் என மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் தன் குடும்பத் தேவைக்காக 1,900 டாலர் பணத்தை தனது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து withdraw செய்த மரீனா, தனது கைப்பையில் பணத்தை வைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

பிறகு, பையை எடுத்து பார்த்த போது, அதில் பணம் இல்லாததைக் கண்டு மரீனா உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ந்து போனது. அந்த குடும்பத்தை பொறுத்தவரை இது பேரிழப்பு என்று தான் கூற வேண்டும். ஏனெனில், மொத்தம் 6 பேரின் மாதாந்திர செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, உணவு என அனைத்து செலவுகளுக்கான ஆதாரமே அந்த 1,900 டாலர் பணம் தான்.

இந்த தகவல், சிங்கப்பூரின் பிரபல ஆன்லைன் இணையதளமான stomp-ல் வெளியானது. இதையடுத்து, அப்பெண்ணுக்கு சிங்கப்பூரில் இருந்து நிதியுதவி குவியத் தொடங்கியது.

மொத்தம் 50 donors-களிடமிருந்து மரீனாவுக்கு 15,000 டாலர் தொகை கிடைத்தது. இந்திய மதிப்பில் இது 11.90 லட்சம் ஆகும். அதுமட்டுமின்றி, அவருடைய பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களும் கிடைத்தன.

மேலும் படிக்க – உழைத்து, உழைத்து… 33 வயதில் கிடைத்த ஒரு பொக்கிஷ வாழ்க்கையை.. தன் கீழ்த்தரமான புத்தியால் இழந்த சிங்கப்பூரர் – ஒரு நொடியில் பேர், புகழ் அத்தனையும் காலி!

தனக்கு கிடைத்த உதவியால் திக்குமுக்காடிப் போன மரீனா இதுகுறித்து பேசுகையில், “என்னை சுற்றி பல வகையான நல்ல மனங்கள் இருப்பதால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உதவி செய்த அனைவரும் என்னை தொடர்பு கொண்டு எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்கள். எனக்காக பேசிய, உதவிய ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தில் பண விஷயத்தில் இனி நான் மிகவும் கவனமாக இருப்பேன்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts