TamilSaaga

‘தமிழ் மொழியின் வளர்ச்சி சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம்’… தமிழின் சிறப்பை எடுத்துரைத்த அதிபர் தர்மன் சண்முக ரத்தினம்!

செப்டம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்திர ஆசிரியர் தின விருந்தில் சிங்கப்பூரின் அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் சிங்கப்பூரில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழ் மொழி இன்னும் அழியாமல் புத்தகத்துடன் செயல்பட ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது என்று கூறினார். தமிழ் மொழியின் மூலம் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை நிலை நாட்ட முடியும் என்பதால் தமிழ் ஆசிரியர்களின் உழைப்பானது தமிழ் சமூகத்தினருக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர் அவர்களுக்கும் முக்கியம் என்று கூறினார்.

சிங்கப்பூரில் தமிழ் மொழியின் விளக்கம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார் அதிபர் மொழி கற்றலை இன்பமான அனுபவமாக மாற்றுவதை அதற்கான தீர்வு என்று தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பொழுது அவர்களுக்கு பிடித்த வகையில் அதனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

Related posts