சிங்கப்பூரில் வாரம் இரண்டு முறை நடக்கும் toto drawவிற்கான குலுக்கல் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது. S$11,49,738 என்ற குரூப் 1 பரிசுடன் குலுக்கல் துவங்கியது. பொதுமக்கள் மற்றும் toto draw நிறுவன ஊழியர்கள் முன்பு இந்த குலுக்கல் நடைபெற்றது.
1,2,25,33,36,40 ஆகிய 6 அதிர்ஷ்ட எண்கள் இந்த முறை வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்டது, இதில் இந்த 6 எண்களையும் சரியாக வாங்கிய வெற்றியாளர் ஒருவர் குரூப் 1 ஜாக்பாட் பரிசான S$11,49,738 (இந்திய மதிப்பில் 6.6 கோடி) வென்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறினார்.
குரூப் 2 பரிசான S$2,42,050யும் ஒரே ஒரு நபரால் வெல்லப்பட்டது, இவர் 1,2,25,33,36,40 என்ற அதிர்ஷ்ட எண்ணில் இருந்து 5 எண்ணையும் கூடுதல் அதிர்ஷ்ட நம்பரான 7லையும் பெற்று இரண்டாம் பரிசை தட்டிச்சென்றார். எனவே இந்த முறை குரூப் 1 மற்றும் குரூப் 2 பரிசுகள் முழுமையாக வெல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை திங்கள்கிழமை அடுத்த வாரத்திற்கான முதல் toto குலுக்கல் நடைபெற உள்ளத்து. சரியாக மாலை 6.30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும். வழக்கம்போல பொதுமக்கள் முன்னிலையில் இந்த TOTO Draw குலுக்கல் நடைபெறும்.
இந்த முறையும் முதல் பரிசு 10,00,000 வெள்ளிக்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, சரியான தொகை குலுக்கல் நடைபெறும்போது அறிவிக்கப்படும். லாட்டரியில் ஜெயிப்பது என்பது முற்றிலும் அதிர்ஷ்டத்தை சார்ந்ததே. ஆகவே இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளாமல் விளையாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.