ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த ஸ்கூட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) இரவு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சம்பவத்தன்று இரவு 7.40 மணிக்கு அந்த Scoot விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் அந்த தொழில்நுடப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த Scoot தெரிவித்தது.
ஃபிளைட் ராடார் 24 என்ற விமான இணையதளம் அளித்த தகவலின்படி, ஃபிளைட் டிஆர் 009 ராட்நெஸ்ட் தீவை சுமார் மூன்று முறை வட்டமிட்டு பின் பெர்த் நகருக்கு திரும்பியுள்ளது. பின்னர் அந்த போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஸ்கூட் தெரிவித்தது.
உடனடியாக விமானம் பெர்த் நகரில் தரையிறங்கினாலும் அந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்றும் Scoot தெரிவித்தது. பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்விருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது Scoot.
இறுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு பெர்த்திற்கு வந்து அதன் பிறகு 9 மணி வாக்கில் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டனர் அந்த பயணிகள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெர்த்தை தளமாகக் கொண்ட பயணிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மற்ற பயணிகளுக்கு தங்குமிடங்கள் வழங்கப்பட்டன. இணைப்பு விமானங்களைக் கொண்ட பயணிகளுக்கும் உதவி வழங்கப்படும் என்றும் ஸ்கூட் தெரிவித்தது.