SINGAPORE: சிங்கப்பூரில் மற்றொரு இந்திய தொழிலாளியின் உயிர் தற்போது பறிபோயுள்ளது.
சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள ஒரு Build-To-Order (BTO) திட்ட பணியிடத்தில் நேற்று (ஜூலை 7) forklift விபத்தில் ஒரு இந்திய கட்டுமானத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சகம் (MOM) கூறுகையில், 571-யூனிட் கீட் ஹாங் வெர்ஜ் BTO Project அமைந்துள்ள கீட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) Site-ல் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அந்த forklift வாகனத்தின் பின்புற counterweight-ல் நின்று கொண்டு, பணியில் ஒரு பகுதியாக overhead beam-ல் மின் கேபிளை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாகனம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது. இதில், forklift-ன் Canopy மற்றும் beam-க்கு இடையில் அந்த ஊழியர் சிக்கினார்.
உயிரிழந்தது 35 வயதான இந்திய தொழிலாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஊழியர் பணியிடத்தில் forklift வாகனத்தின் பின்புறத்தில் இருந்த counterweight-ல் நின்றிருக்கிறார். அதாவது counterweight என்பது, சுமக்கப்படும் பொருட்களின் சரியான எடை விநியோகத்தைப் பாதுகாக்கவும், நிலைத்தன்மையை (CounterBalance) பராமரிக்கவும், வாகனம் சாய்வதைத் தடுக்கவும் மற்றும் வாகனத்தின் பாதுகாப்பு செயல்திறனை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூரின் Mega Engineering நிறுவனத்தின் தான் அந்த இந்திய ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை 10 மணிக்கு இந்த விபத்து நடந்த நிலையில், காலை 10.15 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதையடுத்து, Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஊழியர் சுயநினைவின்றி இருந்தார். ஆனால் ,பிறகு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த விபத்து ஒரு கவனக்குறைவான செயலால் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மரணத்தை ஏற்படுத்தியதற்காக 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் இறந்த தொழிலாளியின் சக ஊழியர் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த பணியிடத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான Teambuild Engineering and Construction நிறுவனம் அங்கு அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தையும் சேர்த்து சிங்கப்பூரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 29 ஊழியர்கள் பணியிட விபத்தில் சிக்கி இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.