பல நூற்றாண்டுகளாக அண்டை நாடான இந்தியாவுடன் சிங்கப்பூர் நல்ல நட்புறவில் இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பலர் இங்கு வந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் துணைபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் சிங்கப்பூர் தூதரகத்தின் உயிர் கமிஷனின் கமிஷனர் வோங் தான் தெலுங்கானாவில் கிடைக்கும் ஹைதராபாதி பிரியாணியை மிகவும் மிஸ் செய்வதாக சிங்கப்பூர் துரதராக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் பெரிய அளவில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறிய வோங், ஏற்கனவே இந்தியர்களையும் அந்நாட்டு உணவுகளையும் மிகவும் மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார்.
அண்டை நாடான இந்தியா, பாரம்பரியத்திற்கு மட்டுமில்லாமல் அறுசுவை உணவுகளுக்கும் பெயர்பெற்ற இடம் என்பது பல தேசத்தினரும் அறிந்ததே.