TamilSaaga

“சிங்கப்பூரில் நீல நிறத்தில் ஒளிரப்போகும் தீவின் 20 முக்கிய இடங்கள்” : எப்போது? ஏன்? – முழு விவரம்

சிங்கப்பூரில் வரும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வை ஊக்குவிக்க 20க்கும் மேற்பட்ட சிங்கப்பூரின் அடையாளங்கள் நீல நிறத்தில் ஒளிரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் புகழ்பெற்ற மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை ஆஃப் பே மற்றும் செயின்ட் ஆண்ட்ரூ கதீட்ரல் ஆகியவை அக்டோபர் 10 முதல் 31 வரை நீல நிறத்தில் ஒளிரும் அடையாளங்களில் ஒன்றாகும்.

டான் டாக் செங் மருத்துவமனை மற்றும் மனநல நிறுவனம் (IMH) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும் நீல நிறத்தில் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட ஒரு கூட்டு வெளியீட்டில், ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் IMH நிறுவனம் கூறியதாவது “கூட்டாக நீல நிறத்தில் ஒளிரச் செய்வதன் மூலம், மனநலப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டி, அந்த பிரச்சனைகள் கொண்டவர்களை பேணிக்காக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஹலீமா அவர்களின் பதிவு

இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) ஒரு ஃபேஸ்புக் பதிவில், ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் “இந்த தொற்றுநோய் பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு எப்படி ஒரு சவாலான காலமாக இருந்தது” என்பதைக் குறிப்பிட்டார். “மனநலப் பிரச்சினைகளின் குறுக்கு வெட்டுத் தன்மை என்பது ஒரு முழு தேச அணுகுமுறை நமக்குத் தேவை என்பதாகும். அரசாங்கத்திற்கு அப்பால், மனநல நிலைமைகள் உள்ள நபர்களுக்கான தொடர்ச்சியான பராமரிப்பில் சமூகம் பெரிய பங்கு வகிக்க வாய்ப்பிருக்கிறது, ” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் தலைமையிலான மனநல முயற்சிகளை அதிகரிக்க நிறுவனங்களுக்கு உதவ சமூகத் துறைக்கு அதிக ஆதரவை வழங்குவதாக நம்புவதாக ஹலிமா மேலும் கூறினார்.

Related posts