SINGAPORE: SMRT யின் ஆங் மோ கியோ பேருந்து நிலையத்தில் உள்ள பணிமனையில் பேருந்து பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், வாகனத்தைத் தூக்குவதற்கு அங்கீகரிக்கப்படாத ஜாக்கிகளைப் பயன்படுத்தியதால் தான் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 23) தெரிவிக்கப்பட்டுள்ளது. (அடக்கடவுளே!)
சிங்கப்பூரின் SMRT இன் துணை நிறுவனமான ஸ்ட்ரைட்ஸ் ஆட்டோமோட்டிவ் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தவர் Thin. இவர் கடந்த ஜூன் மாதம் SMRT யின் ஆங் மோ கியோ பேருந்து நிலையத்தில் உள்ள பணிமனையில் பேருந்து பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பேருந்து இவர் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த விபத்து ஏற்பட்டதன் காரணம் குரித்து சிங்கை போலீசார் தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணை அதிகாரி லி சின் ரோங் கூறுகையில், “Thin Soon Fatt (வயது 43) எனும் அந்த ஊழியர், அங்கீகரிக்கப்படாத ஜாக்கிகளை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி, Thin மற்றும் அவரது இரண்டு சக ஊழியர்கள் பேருந்தை பழுது பார்க்க அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த பேருந்து BYD-ல் மின்சார பேருந்தாகும். அந்த பேருந்தின் steering wheel-ல் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கவே அவர்கள் மூவரும் அனுப்பப்பட்டனர். பேருந்து மொத்தம் 7.5 டன் எடை கொண்டது. அதில், பேருந்தின் முன்பகுதி மட்டும் 3 டன் எடை கொண்டது.
இந்த சூழலில் தான், மொத்தம் 2 டன்களைத் தாங்கும் 2 ஜாக்கிகளை பயன்படுத்தி பேருந்துக்கு அடியில் சென்று Thin பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில், பழுதுபார்க்கப்பட்ட பிறகு, ஊழியர் Thin வாகனத்தின் அடியில் இருந்த படியே, ஒரு ஜாக்கியை அகற்றி இருக்கிறார். இதனால், மற்றொரு ஜாக்கியால் 3 டன் எடையை தாங்க முடியாமல் போக, பேருந்தின் chassis Thin மீது பலமாக மோதியது.
இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி Thin உயிரிழக்க நேரிட்டது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, Thin-ன் சக பணியாளர் ஒருவர் முறையான ஜாக் மற்றும் வாகன ஸ்டாண்டுகளைப் பயன்படுத்தலாம் என்று அப்போது கூறியிருக்கிறார். ஆனால், அவர்களுக்கெல்லாம் மேற்பார்வையாளராக இருந்த தின், சக பணியாளரின் யோசனையை புறக்கணித்தது மட்டுமில்லாமல், அவ்வாறு செய்வதிலிருந்து அந்த ஊழியரை தடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.