சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் 6,600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. பெருந்தொற்றுக்கு பிறகு விமான சேவை முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், அதிகளவு பணியாளர்களை தேவை ஏற்பட்டுள்ளது.
சாங்கி ஏர்போர்ட் குரூப் (சிஏஜி) செவ்வாய் இரவு (மே 17) தனது சாங்கி ஜர்னிஸில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சன்டெக் சிங்கப்பூர் கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் ஒரு விமானப் போக்குவரத்துக் கண்காட்சியில் இந்த பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதில், 20க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் நேரடியாக நேர்காணல்களை நடத்துகின்றன. Frontline passenger service பணிகளை நிரப்புவதில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
மேலும், உணவு மாசுபாட்டை சரிபார்க்கும் தர உத்தரவாதக் குழுவிலும், விமான நிலைய அவசர சேவை மற்றும் இணைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளன.
6,600 வேலை காலியிடங்களை நிரப்புவதால், விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு நிலைகளை 2019 ஆம் ஆண்டு நிலைக்கு கொண்டு வர முடியாது என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கையில் நடத்தப்படும் மிகப்பெரும் தொழில்துறை நேர்காணல் இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விமான நிலைய பங்குதாரர்கள் போட்டி ஊதியம், நல்ல ஊக்கத்தொகை மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக CAG கூறியது.
HR search மற்றும் ஆலோசனை நிறுவனமான PeopleWorldwide Consulting இன் நிர்வாக இயக்குனர் டாக்டர் டேவிட் லியோங் கூறுகையில், “நோய்த்தொற்றுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தின் (CAG) மிகப்பெரிய பணியமர்த்தல் Campaign-ல் ஒன்றாக இது இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.