இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற செய்தி தீயாக பரவியது. அந்த வீரர் யாரென்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் அதிகரித்தது. தற்போது அந்த வீரரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள ரிஷப் பண்ட் அவர்களுக்கு தான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 8 தினங்களுக்கு முன்பாகவே அவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தொற்று ஏற்பட்டு இருந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ 2020 கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி இடையேயான போட்டியை காணச் சென்றவர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். தற்போது அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து இந்தியா இடையிலான போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
இவர் மட்டுமல்லாமல் இந்திய அணியின் Throwdown Expert தயானந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டீவ் என்ற செய்தி வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர் மற்றும் தொடர்பில் இருந்த 4 பேரையும் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.