TamilSaaga

பிரபல அரசியல் தலைவருடன் திருமணம்.. தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் விழுந்து இறந்த மணமகள்.. “மருத்துவர்களால் வெளிவந்த உண்மை”

எல்லாம் திருமணங்களும் பூமியில் தான் நிச்சயிக்கப்படுகிறது, பூமியில் தான் நடக்கிறது, அதை சொர்க்கமாக மாற்றிக்கொள்வது அந்த தம்பதிகளின் கையில் தான் உள்ளது என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட சோகம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் மடியிலேயே மணமகள் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேச கட்சியின் மதுரவாடா இளைஞர் அணி தலைவர் சிவாஜிக்கும் சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.

மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண வைபோகத்தில் ஆந்திரா மக்களின் வழக்கப்படி எல்லா சடங்குகளும் மிகவும் விமர்சையாக நடைபெற்று வந்தது. தாலி கட்டும் சடங்கு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் உற்றார் உறவினர்கள் எல்லாம் மகிழ்ச்சில் திளைத்திருந்த நேரத்தில் தான் மணமகன் சிவாஜி மடியில் மணமகள் சுஜாதா மயங்கி விழுந்துள்ளார்.

பதறிப்போன உறவினர்கள் உடனடியாக சுஜாதை அருகில் இருந்த மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சுஜாதா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், விஷம் குடித்ததால் தான் அவர் இறந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி தைரியமா சிங்கப்பூர் வரலாம்.. Waiting Period இனி இல்லை.. வெளிநாட்டு ஊழியர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து வரவேற்கும் சிங்கை – ஒரே மாதத்தில் அதிகரித்த Demand!

மிக பிரமாண்டமாக நடைபெற்ற திருமண சடங்குகள் ஒரு நிமிடத்தில் நிலைகுலைந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதால் இது அவருடைய சம்மதம் இல்லாமல் நடந்த கல்யாணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.

T.N. பாளையம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எல்லாம் முடிந்து கோலாகலமாக திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts