கடந்த ஏப்ரல் 21 அன்று சிங்கப்பூர் புக்கிட் பாடோக் வெஸ்டில் உள்ள ஷெங் சியோங் பல்பொருள் அங்காடியில் முதியவர் ஒருவர் தன்னைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்த தகவல்களையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முகநூலில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அந்த பெண்ணின் பெயர் Siti Mariam, அந்த பதிவில் அந்த முதியவரை பிடிக்க உதவிய மூன்று சூப்பர் மார்க்கெட் ஊழியர்களைப் பாராட்டவும், இதுபோல உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் என்பதை உணர்த்தவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார்.
கடந்த ஏப்ரல் 21 அன்று மாலை சுமார் 4:15 மணியளவில் தனது ஏழு வயது மகன் ஹில்மானுடன் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடியில் சில மளிகைப் பொருட்களைப் வாங்கிக்கொண்டிருந்ததாக Siti மதர்ஷிப்பிடம் கூறினார்.
அருகில் இருந்த மகன், மிட்டாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓட, இவர் பிற பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது தனது பின்பக்கத்தை யாரோ தடவுவது போல உணர்ந்த, தனது மகன் தான் விளையாடுகிறான் என்று எண்ணி சட்டென்று திரும்பி பார்த்துள்ளார்.
அவ்வாறு அவர் திரும்பிப்பார்த்தபோது அங்கு ஒரு வயது முதிர்ந்தவர் நின்றுகொண்டிருக்க தனக்கு நேர்ந்த அந்த விஷயத்தை நினைத்து வெகுண்டுபோன அவர் “என்ன செய்கிறீர்கள்” என்று உரக்க கத்தியுள்ளார். அதோடு நின்றுவிடாமல் பளார் என்று அவர் கன்னம் சிவக்க ஒன்று வைத்துள்ளார்.
உடனே அந்த முதியவர் அங்கிருந்த ஓட்டம்பிடிக்க அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டவாறு Siti அந்த முதியவரை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். தான் பாலியல் ரீதியாக அணுகப்பட்டதை அந்த பெண் கூற உடன் அருகில் இருந்த மூன்று அங்காடி ஊழியர்களும் அந்த முதியவரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.
66 வயதாகவும் அந்த முதியவர் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக Siti கூறினார். அங்காடியில் இருந்த CCTV கட்சிகளும் அந்த ஆண் வேண்டுமென்றே அந்த பெண்ணின் பின் புறத்தை பிடித்தது தெரியவந்தது.