TamilSaaga

பெட்ரோல் டேங்கில் அமர்ந்து… கொஞ்சம் கூட வெட்கமின்றி.. பட்டப்பகலில் பைக்கை ஓட்டிக் கொண்டே “காமக்களியாட்டம்” – விரட்டி விரட்டி வீடியோ எடுத்த இளைஞர்கள்

அடடே… அற்புதம்.. அபாரம்.. “என் கண்ணே பட்டுடும் போல இருக்கே” எனும் ஒரு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலத்திற்கே சமீபத்தில் ஒரு கெத்தான பெயரை வாங்கிக் கொடுத்தது யஷ் KGF-2 திரைப்படம். கன்னட சினிமா என்றாலே கேலி, கிண்டல் என்றிருந்த நிலையை தகர்த்தெரிந்தது யஷ்- பிரஷாந்த் நீல் கூட்டணி. பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என்று அனைத்து ‘வுட்’களும் கட் அவுட் வைத்து கொண்டாடும் அளவுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. எங்கேயோ அதலபாதாளத்தில் கிடந்த கன்னட சினிமாவின் பெயரையும் தூசித் தட்டி, ஒரே படத்தில் உச்சாணி கொம்பில் வைத்துவிட்டது.

ஆனால், இந்த ஒரு படத்துக்காக தமிழ் சினிமா பின்னோக்கி சென்றுவிட்டது என்றும், பிரஷாந்த் நீல் அளவுக்கு திறமையான இயக்குனர்கள் நம்மிடம் இல்லையே என்றும் சில ரசிகர்கள் உணர்ச்சிவசத்தில் சமூக தளங்களில் குமுறியதையும் காண முடிந்தது. சரி… இது வேற ஒரு டாபிக். வேற ஒரு செய்தியில் டிஸ்கஸ் பண்ணுவோம். இப்போ விஷயத்துக்கு வருவோம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 1 மாதத்திற்கு வேற லெவல் திருவிழா.. சிங்கை அரசின் முடிவால் உலகெங்கும் அதிரப்போகும் தமிழின் “கெத்து”

இந்நிலையில், அதே கர்நாடகாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அம்மாநிலத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்! கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா அருகே, ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தது. அதுவும் எப்படி…? பெட்ரோல் டாங்கில் மீது அமர்ந்திருந்த அப்பெண், முதலிரவில் செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் பைக்கில் செய்து கொண்டிருந்தார். அந்த பையனோ பைக்கை மிதமான வேகத்தில் ஓட்ட, இந்த சல்லாபம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

கொஞ்சம் கூட கூச்ச நாச்சமின்றி அவர்கள் செய்த இந்த அசிங்கமான காரியம், சாலையில் சென்றோரை முகம் சுழிக்க வைத்தது. பொதுமக்களில் ஒருவர் கூட அவர்களை வழிமறித்து இந்த அசிங்கத்தை தட்டிக் கேட்கவில்லை. ஆனால், சில இளைஞர்களோ, பைக்கில் பின்தொடர்ந்து சென்று, அவர்கள் லீலையை அப்படியே வீடியோ எடுத்து சமூக தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts